சங்கர் கொலை வழக்கு.. கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு!

0
30466

சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கௌசல்யாவின் பெற்றோர்கள் உள்பட எட்டு பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகமே அதிர்ந்த சங்கர் கொலை வழக்கு... கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு!

சங்கர் படுகொலை:

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து மறைந்திருக்காது. குரூரமான முறையில் நடு சாலையிலேயே சங்கர் – கௌசல்யா மீதான வெறியாட்டம் அரங்கேறியதில், சங்கர் அங்கேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். கௌசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

தமிழகமே அதிர்ந்த சங்கர் கொலை வழக்கு... கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு!
கௌசல்யாவின் தாய் – தந்தை

அதிர்ந்த தமிழகம்:

சங்கரும் கௌசல்யாவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், கௌசல்யாவின் பெற்றோரும் உறவினருமே இணைந்து கூலிப்படை ஏவி இந்த கொலையை நிகழ்த்தினர். தமிழகத்தையே உலுக்கிப் போட்டது இந்த ஆணவப் படுகொலை. அடுத்த நாளுக்குள் இக்கொலையை நிகழ்த்திய கௌசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படை ஆட்கள் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழகமே அதிர்ந்த சங்கர் கொலை வழக்கு... கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு!
கௌசல்யாவின் தாய்மாமன்

அதிரடி தீர்ப்பு:

இதுவரை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்துள்ள விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கொலையை நிகழ்த்தியதில் ஈடுபட்ட கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் தாய்மாமன் உள்பட எட்டு பேரை குற்றவாளிகள் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ் அதிரடி தீர்ப்பினை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here