சாம்சங் புதிய புரட்சி.. ஒண்ணு, ரெண்டில்ல.. மொத்தம் 4 கேரமா..!!

0
205

உலகிலேயே முதல் முறையாகச் சாம்சங் நிறுவனம் 4 கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை தயாரித்துத் தனது போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் புதிதாகத் தயாரித்துள்ள கேலக்ஸி ஏ9 2018ஆம் ஆண்டு வெளியீட்டில் இந்த 4 கேமரா அம்சம் உள்ளது, இதற்கு முன்பு கேலக்ஸி ஏ7 2018 மாடலில் 3 கேமரா அம்சம் வெளியிட்ட நிலையில் தற்போது இதை மேம்படுத்து அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது சாம்சங்.

இப்புதிய கேலக்ஸி ஏ9 டெலிபோட்டோ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இது 10எம்பி, 2X ஆப்டிகல் சூம் வசதி கொண்டுள்ளது.

இதோடு இப்போனில் 8எம்பி அல்டரா வைட் கேமரா, 5எம்பி டெப்த் சென்சார் கேமாகவும் உள்ளது. மேலும் இந்தப் போனில் சீன் ஆப்டிமைசர் மற்றும் ஏஐ உள்ளதால் அனைத்தும் தானாகவே மேம்படுத்திக்கொள்ளும் திறன் இதில் உள்ளது.

மேலும் இந்தப் போனில் 24எம்பி பிரென்ட் கேமரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.. களத்தில் இறங்கும் நோக்கியா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here