IND Vs. SA: யோசனை கூறிய சச்சின்… 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர்!

0
413

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய புவனேஸ்வர்குமார் மூன்று விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கியுள்ள டி.வில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூப்லசிஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தென்னாப்பிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் களம் இறங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆலோசனை வழங்கிய பிறகே மைதானத்திற்கு வழியனுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் வெற்றிப் பெற வீரர்களுக்கு புதிய யோசனை தெரிவித்துள்ளார். அஷ்வினுக்கு சாதகமாகும் வகையில் ஆடுகளத்தின் தன்மையை பந்துவீச்சால் கடினமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தால் சுழற்பந்து வீச்சுக்கு அதிக பலன் அளிக்கும் என யோசனை வழங்கியுள்ளார். 2010ல் கேப்டவுனில் நடந்த போட்டியில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் கூட்டணி போதிய அளவு ஆடுகளத்தினை கடினப்படுத்தியதால், ஹர்பஜன் சிங் 7 விக்கெட்களை வீழ்த்தினார் என்றும் தெரிவித்தார். அதே வியூகத்தை தற்போது தற்போதும் கடைப்பிடிக்குமாறு இந்திய அணிக்கு யோசனை வழங்கியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here