மோசமான நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு.. என்ன காரணம்..?

0
3392

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.62 ரூபாய் வரையில் சரிந்து, அன்னிய முதலீட்டாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Rupee hits record low of 69.62 to dollar on Turkey crisis - SparkTV Tamil  மோசமான நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு.. என்ன காரணம்..? - ஸ்பார்க்டிவி தமிழ்

துருக்கி நாட்டில் தற்போது பொருளாதாரப் பிரச்சனை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நாட்டின் நாணயமான லிராவின் மதிப்பு தாறுமாறாகக் குறைந்து வருகிறது. இதன் தாக்கம் ஐரோப்பிய சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.

Rupee hits record low of 69.62 to dollar on Turkey crisis - SparkTV Tamil  மோசமான நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு.. என்ன காரணம்..? - ஸ்பார்க்டிவி தமிழ்

இதன் எதிரொலியாகவே தற்போது நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் அதிகரித்து ரூபாய் மதிப்பு அடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.62 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

மேலும் துருக்கியில் தற்போது இருக்கும் டையாப் தலைமையிலான அரசு அமெரிக்கா உடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார நட்புறவை முறித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதே தற்போது துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை.

Rupee hits record low of 69.62 to dollar on Turkey crisis - SparkTV Tamil  மோசமான நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு.. என்ன காரணம்..? - ஸ்பார்க்டிவி தமிழ்

இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் தரவுகள் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here