தோனியின் சாதனையை ஈடு செய்த ரோஹித் சர்மா..!

0
634

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், இந்திய அணியின் ஆஸ்தான ஒப்பனர் ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

திங்கட்கிழமை நடந்த இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் அபாரமாக விளையாடி அரைச் சதம் அடித்தது மட்டும் அல்லாமல் இப்போட்டியில் 2 சிக்சர்களையும் அடித்தார். இந்த இரண்டு சிக்சர் மூலம் ரோஹித் சர்மா அதிகச் சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியின் அடித்த 2 சிக்சர் மூலம் ரோஹித் சர்மா சுமார் 2015 சிக்சர்களை அடித்துள்ளார். இது தல தோனியின் சாதனைக்கு இணையானதாகவும். இதன் மூலம் அதிகச் சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைத் தோனியும், ரோஹித் சர்மாவும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்திய அணியின் ஆஸ்தான ஓப்பனராக இருக்கும் ரோஹித் சர்மா பொதுவாகத் தவான் உடன் கிளமிறங்கும் நிலையில், இருவருக்கும் மத்தியில் நல்ல கூட்டணி உருவாகி இந்திய அணி அதிக ரன்களை எடுக்க முக்கியப் பாலமாக இக்கூட்டணி அமைகிறது.

சில மாதங்களுக்கு முன் தோனி கேப்டன் பதிவியில் இருந்து இறங்கிய நிலையில், ஒரு நாள் போட்டிக்கு கோலியும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை.

இதன் பின்ற டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திற்கும் விராத் கோலியை கேப்டன்னாக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here