மீண்டும் குத்துசண்டை படத்தில் ரித்திகா சிங்.. மாதவனுக்குப் பதில் இவர்..!

0
114

சாக்லேட் பாயாக வளம் வந்த மாதவன் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தன் நடிப்பை, படத்தின் தேர்வையும் முழுமையாக மாற்றினார். இது அவருக்குப் பல வெற்றியைக் கொண்டு வந்தது என்றால் மிகையில்லை. இந்நிலையில் இறுதிச்சுற்று படத்தின் மாபெரும் வெற்றிக்கு மாதவன் மட்டும் தான் காரணம் என்றால் நிச்சயம் இல்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரித்திகா சிங்-ம் முக்கியக் காரணம்.

இறுதிச்சுற்றுப் படத்தைத் தொடர்ந்து ரித்திகா பல படங்களில் நடித்திருந்தாலும் பத்திரிக்கையாளராக நடித்து வெளியான ஆண்டவன் கட்டளை என்கிற படம் பெரிய அளவிலான வெற்றி அடைந்தது.

இந்நிலையில் தற்போது ரித்திகா சிங் பாக்சர் (குத்துச்சண்டை) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ரித்திகா பாக்சர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் விளையாட்டு துறையைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார், செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் சினிமாவில் தான் இழந்த இடத்தையும் பெயரையும் மீண்டும் பெற்றார். இதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் ஆல் டைம் ஹிட் கொடுக்கும் விளையாட்டு துறையை மையப்படுத்திய கதைக்களத்தைத் தேர்வு செய்துள்ளார் அருண் விஜய்.

பாக்சர் படத்தை விவேக் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனா படம் பெரிய வெற்றியை அளித்துள்ள நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் விஜய் இணைந்துள்ள படமும் விளையாட்டை அடிப்படையான படமாக அமைந்துள்ள நிலையில், தற்போது பாக்சர் படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளார்.

சொல்லப்போனால் படிப்புப் படிப்பு எனச் சுற்றிக்கொண்டு இருக்கும் பல மாணவர்களுக்கும் இத்தகைய படங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும். எப்போதும் காதல், கொலை காட்சிகள் நிறைந்திருக்கும் திரைப்படங்களைப் பார்த்து போர் அடித்துகிடக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு முக்கிய மாற்றாக இருக்கும் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here