வாழ்த்து மழையில் நனையும் Baby-Sitter ரிஷாப் பன்ட்..!

0
766
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 622 ரன்களைக் குவித்துள்ளது.
இதில் புஜாரா 193 ரன்களும், ரிஷாப் பன்ட் வெறும் 189 பந்துகளில் 159 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய பவுலர்களைத் திக்குமுக்கு ஆட வைத்தார்.
கடந்த சில நாட்களாகப் பேபி சிட்டர் என் கலாய்க்கப்பட்டு வரும் ரிஷாப் பன்ட இன்றைய போட்டியில் ஆடிய ஆட்டத்தின் மூலம் கலாய்த்த அனைவரின் முகத்திலும் கரியை பூசியுள்ளார்.
ரிஷாப் பன்ட் வெளிநாடுகளில் இதுவரை 2 சென்சூரிகளை அடித்துள்ளார். முதல் சதம் இங்கிலாந்திலும், 2வது ஆஸ்திரேலியாவிலும் சென்சூரி அடித்த விக்கெட் கீப்பர் சிலர் மட்டுமே, இதில் பன்ட் 2வதாக இடம்பெற்றுள்ளார். ஜெப் டூஜான்-க்கு அடுத்தாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் சென்சூரி அடித்துள்ளார் பன்ட்.
இதைத் தொடர்ந்து ரிஷாப் பன்ட்-ஐ பாராட்டி வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here