ரஜினியின் காலா படத்தில் இது இருக்கும்னு கண்டிப்பா எதிர்ப்பாக்காதீங்க!!

0
49

ஒரு மும்பை தாதாவான காலா தங்களுடைய நிலத்தின் மீதான உரிமைக்காக போராடும் எளிய மக்களின் தலைவன்.

மும்பையின் முக்கிய வணிக இடத்தில் அமைந்துள்ள தாராவி என்ற இடம் மிக அழுக்கும், நாற்றமும் கொண்ட இடம். நமது கூவம் போல்.

அந்த இடத்தை எளிய மக்களிடமிருந்து அபகரித்து லாபம் பார்க்க நினைக்கும் மிகப்பெரிய மனிதர்களுக்கும், அந்த எளிய மக்களுக்கும் நடுக்கும் போராட்டம்தான் இந்த படம்.

ரஜினிக்கு இந்த படத்தில் மிக கச்சிதமான கதாப்பாத்திரம். தடதடக்கும் சூப்பர் பாடல்களோ, பதினாறு வயசுப் பொண்ணுடன் டூயட்டோ, அல்லது அவரின் பின்னாலேயே மயங்கி துரத்தி துரத்தி காதல் செய்யு ஹீரோயினோ, பக்கம் பக்கமாக நாட்டை திருத்தும் வசனங்களோ எதுவும் இல்லை…

வயதான தாதா. அவரது அழகான குடும்பம் என புதிதாக இருக்கிறது ரஜினியை திரையில் பார்க்க…தாதாவாக வந்தாலும் பெரிதாக மக்களுக்கு காலா எதுவும் செய்யவில்லை. ஆனால் ஏன் மக்கள் அவர் பின்னால் செல்கிறார்கள்? இது உறுத்துகிறது.

அவரும், அவரது அப்பா வேங்கையனும்தான் அங்கிருக்கும் மக்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். காலா அந்த இடத்தை யார்ஆக்கிரமிப்பு செய்ய நினைத்தாலும் விரட்டி அடிக்கிறார் என்றாலும், ஒட்டுமொத்த மக்களும் அவர் பின்னால் செல்வதற்கான காரணங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

இந்தப்படத்தில் காலாவின் முன்னால் காதலியாக வரும் சரினா, மனைவியாக நடிக்கும் செல்வி இரு பாத்திரங்களும் மிக அருமையாக இருந்தது.

 

குறிப்பாக, சரினாவும், காலாவும் அடிக்கடி சந்திக்கும்போது, லேசான பொறாமையுடன் கள்ளங்கபடமற்ற காதலை வெளிப்படுத்தும் கிராமத்து செல்வி பாத்திரத்திற்கு, அதில் நடித்த ஈஸ்வரி ராவின் நடிப்பு ஏக பொருத்தம்.காலா இருவரிடமும் கோல் போடுகிறார் என்றாலும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.

இங்கிருக்கும் ஒவ்வொருவரும் காலாதான் என்ற வசனத்திற்கேற்ப க்ளைமாக்ஸில் வரும் அதகளமாக சீன் நிச்சயம் எல்லாரையும் விசிலடிக்க வைக்கும்.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்த படம் இது இல்லை. ஆனால் இந்த மாற்றம் ரஜினிக்குத் தேவை, . 80களில் அவர் நடிப்பைப் பார்த்து பிரமித்தவர்களுக்கு, ஒரு சோளப்பொறியாவது கிடைத்ததே என்ற நிறைவை இந்தப் படம் தரும்.

நானா படேகரின் நடிப்பு மிரள வைக்கிறது. அவர் வரும் போது தரும் பிண்ணனி இசை அசத்தல். காலாவின் மகன்கள், ஈஸ்வர் ராவ், சமுத்தரக்கனி, அஞ்சலி படீல் என எல்லாருக்குமே தனித்தன்மையான பாத்திரம்., யாருமே ஒப்புக்கு வரவில்லை என்பது பெரிய விஷயம்.

பா ரஞ்சித் அடுத்த முறை தனது கான்செப்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ஸ்க்ரீன் ப்ளேயில் குறையில்லை என்றாலும், மெட்ராஸ், கபாலி ஸ்டைலில் நில ஆக்கிரமிப்பு பற்றியே இந்த படமும் இருக்கிறது. வேறு கதைகளத்துக்கு மாறுங்க டைரக்டர் சார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here