புது துணி வாங்கி அப்படியே யூஸ் பண்றீங்களா? சத்தியமா யூஸ் பண்ணாதீங்க..!

0
1044

புதுத் துணி வாங்கினா நீங்க முதல் காரியமா என்ன செய்வீங்க? ரூம்ல யாருக்கும் தெரியாம நாலைஞ்சு தடவையாவது போட்டு பார்ப்பீங்க.

அப்புறம் அதை பயன்படுத்துவீங்க. ஆனா உண்மையில நீங்க என்ன செய்யனும் தெரியுமா? வாங்கினதும் துணியை அலசி காய வச்சு போட்டுக்கனும்.

அநேகமா இந்த விஷயம் நம்மில் கொஞ்சம் பேருக்கு கூட தெரியாது. எல்லாருமே புதுத் துணி வாங்கினதும் உடனேயே அதனை வாங்கிப் போட்டி ரெண்டு மூணு தடவை எல்லா இடத்துக்கும் போட்டுட்டு அப்புறம்தான் துவைக்கவே போடுவோம். அதுவும் அரை மனசோட துவைக்க போடுவோம். அது தப்பு. ரொம்பவே தப்பு. ஏன் தெரியுமா?

எந்த புதுத் துணி எடுத்தாலும் அதில் நிறைய ரசாயனங்கள் இருக்கும். அந்த ரசாயனங்கள் நம் சருமத்தில் படும்போது அலர்ஜி, சரும நோய்கள் மெல்ல பரவும். துணி நெய்வதற்கு முன், நூலில் பூஞ்சை உருவாகாமல் தடுக்க பூஞ்சை எதிர்ப்பு ரசாயனக் கலவையை ஸ்ப்ரே சேர்ப்பார்கள். அதோடு துணியின் நிறம் அப்படியே இருக்க நிறைய ரசாயனங்கள் சேர்ப்பார்கள் இதனால் துணி புதிதாக அப்படியே இருக்கும்

இந்த ரசாயனக் கலவைகளில் அவர்கள் முக்கியமாக சேர்ப்பது அசோ அனிலின் மற்றும் ஃபார்மால்டிஹைட். இரண்டுமே சருமத்திற்கு எதிரானது.

மேலும் ஷோ ரூமிற்கு வந்தபின் குறைந்தது அந்த துணியை 100 பேராவது ட்ரையலில் போட்டு பார்த்திருப்பார்கள். இதனால் கோடிக்கணக்கான கிருமிகள் அந்த துணியிலேயே தங்கி விட்டிருக்கும்.

கற்பனை செய்து பாருங்கள். ரசாயனங்கள், கிருமிகள் கலந்த இந்த புதுத் துணியை அப்படியே போட்டால் உங்கள் சருமம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். எனவே எப்போது புதுத் துணியை வாங்கினாலும் ஒரு முறை நீரில் சுத்தமாக அலசி, வெயிலில் காய வைத்து பயன்படுத்திடுங்கள். சருமம் ஹெல்தியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here