கலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

0
1604

குடை மிளகாய் தானே என அலட்சியப்படுத்துபவர்கள்தான் நாமெல்லாம். ஆனால் குடை மிளகாய் மிக அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கொண்டுள்ளது.

அவை உடலுக்கு மிகவும் அற்புதங்கள் செய்பவை. சாதரண பச்சை குடை மிளகாய் விட, சிவப்பு, மஞ்சள் என பல நிற குடை மிளகாயை சாப்பிடுவதால் மிக அருமையான பலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமா அவை எந்த நோயை குணப்படுத்தும் தெரியுமா? வாங்க அதுக்கு முன்னாடி அதன் சத்துக்களை தெரிஞ்சுக்கலாம்.

குடை மிளகாயில் உள்ள சத்துக்கள் :

புரதம், சிறிதளவு கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், விட்டமின் சி, விட்டமின் ஏ போன்ற முக்கிய சத்துக்கள் குடை மிளகாயில் உள்ளது. இதில் கொழுப்பு மற்றும் உப்புச் சத்து இல்லாததால் இதயத்திற்கு மிகவு நல்லது. குறிப்பாக இதய நோயாளிகள் சாப்பிடலாம்.

எல்லாவற்றையும் விட, உடல் செல் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களை அழித்து செல்களை அரண் போல் காக்கின்ரன. ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் தேவையற்ற மூலக்கூறுகளெ நம் உடலில் எர்படு பெருமளவு நோய்களுக்கு காரணம்.

சர்க்கரை வியாதி :

மேலும் சர்க்கரை வியாதி மற்றும் உடற்பருமன் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் குடை மிளகாயில் இருப்பதாக ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. குறிப்பக பல வித நிரங்களில் காணப்படும் பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயை நிறைய சத்துக்கள் நிறைந்தது சர்க்கரை வியாதிக்கு மருந்தாக செயல்படுகிறது

பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு போன்ற பல நிற குடைமிளகாய்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அடவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவை சர்க்கரை வியாதி மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

பச்சை நிற குடை மிளகாயை விட மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குடை மிளகாய்கள் சர்க்கரை நோய்க்கு காரணமான ஹார்மோன் மாற்றத்தை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துகறது. எனவே பச்சை குடைமிளகாயை விட மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் சிறந்தவை.

மற்ற நன்மைகள் :

ரத்த அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.

பீட்டா கரோடின் அதிகம் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கின்றது. எலும்பு மற்றும் பற்களை வலிமைப் படுத்தி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here