புதிதாக திருமணமான பெண்களின் அதீத கவர்ச்சிக்கு இது தான் காரணமாம்!

0
99

நமது தோழிகள் அல்லது உறவுக்கார பெண்களை கவனித்திருந்தால், புதிதாக திருமணமான பெண்கள் அதீத கவர்ச்சியானதை அறியலாம்.. பொதுவாக கவர்ச்சி என்று வெறும் உடல் வடிவம், சருமத்தின் நிறத்தினை மட்டுமே சார்ந்தது கிடையாது. ஆழ்மானதில் இருந்து வரும் உற்சாகம், பாதுகாப்பு உணர்வு போன்றவை தான் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது.

இந்த காரணத்தினால் தான் திருமணமான பெண்கள் திடீரென்று கவர்ச்சியாக தோன்றுகின்றனர். இந்த பகுதியில் பெண்கள் எந்தெந்த காரணத்தினால் திருமணத்திற்கு பிறகு திடிரென்று கவர்ச்சியாக மாறிவிடுகிறார்கள் என்பது பற்றி விரிவாக காணலாம்.

தனக்கென ஒருவன்

திருமணமான பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவை அதிகமாக இருக்கும். தனக்கென ஒருவன் இருக்கிறான். எனது சுக, துக்கங்களில் பங்கெடுப்பதற்காகவே ஒருவன் எனக்காக இருக்கிறான் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும். இதுவே அகத்தில் இருந்து பெண்களின் முகத்தில் வெளிப்பட்டு ஒரு புதிய ஈர்ப்பை உண்டாக்குகிறது.

பாதுகாப்பு

திருமணம் ஒரு பெண்ணுக்கு மரியாதையையும் ஒரு உயர்வான இடத்தையும் தருகிறது. கணவன் என்ற ஒரு பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவளை யாரும் எதுவும் செய்து விட முடியாது.. இதனாலும் பெண் ஈர்ப்பு உடையவளாகிறாள்.

ஆசைகள்

தனது நீண்ட நாள் ஆசை கனவுகள் நிறைவேறினால், யாருக்கு தான் முகம் மின்னாது? அனைவருக்குமே திருமணத்திற்கு பிறகு இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று கோடான கோடி ஆசைகள் மனதில் குடி கொண்டிருக்கும்.. இந்த ஆசைகள் மற்றும் கனவுகள் எல்லாம் நிஜமாகவே நடக்கும் போது, பெண்கள் முகம் 1000 பல்புகளை ஒரே நேரத்தில் போட்டது போல கவர்ச்சியாக மாறிவிடுகிறது.

காதல்

யார் தனக்கு கணவனாக போகிறான் என்ற குழப்பம் அனைவருக்குமே இருக்க கூடியது தான்.. அதை எல்லாம் தாண்டி இறுதியில் இவன் தான் என் கணவன், இனி என் வாழ்க்கை இவனுடன் தான் என்று ஆகும் போது, அந்த நிலையான காதல் கிடைக்கும் போது பெண்ணின் மனம் உற்சாகத்தில் திளைக்கிறது. அந்த அகத்தின் வெளிப்பாடு தான் முகத்தில் வெளிப்படையாக தெரிகிறது. நிரந்தமான ஒரு காதலில் உள்ள உற்சாகமும் வேறு ஏதாவதில் இருக்கிறதா என்ன?

பொறுப்பு

இத்தனை நாட்கள் தனது தாய், தந்தைக்கு குழந்தையாய், வீட்டின் சுட்டி பெண்ணாய் திகழ்ந்தவளுக்கு, குடும்ப பொறுப்பு, தனக்கென இருக்கும் கடமைகள், தலைமை பண்பு, வீட்டில் முன் நின்று அனைத்து விஷயங்களையும் செய்வது என்று வரும் போது மன முதிர்ச்சி ஏற்பட்டு முகத்தில் ஒரு தைரியம் மற்றும் கம்பீரம் வெளிப்படுகிறது. தைரியமான பெண்கள் அழகாக தானே தெரிவார்கள்…

 

தாய்மை

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் ஒரு மிகப் பெரிய வரம் என்று சொல்லலாம். தாய்மை அடையும் போது தான் ஒரு பெண் முழுமையாகிறாள். பெண் ஈர்ப்பாக தெரிவதற்கு அவளது தாய்மையும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

உறவுகள்

உறவுகள் என்றாலே உற்சாகமும், சந்தோஷமும் தானே.. புதுப்புது உறவுகள், உறவுகள் தன் மீது செலுத்தும் அன்பு, தான் உறவுகள் மீது செலுத்தும் அன்பு, உறவுகளின் கவனிப்பு போன்றவை பெண்களின் ஈர்ப்பை அதிகரிக்கும்.

கணவனின் அன்பு

திருமணம் ஆகி செல்லும் இடத்தில் எது எப்படி இருந்தாலும் சரி, தன் கணவனின் அன்பும் அரவணைப்பும் மட்டும் ஒரு பெண்ணுக்கு கிடைத்து விட்டாலே அவளது மனம் மகிழ்ச்சியடைந்து விடும். கணவனின், அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்து போகும் திறன், கணவனின் நல்ல குணங்கள் போன்றவைகள் பெண்ணுக்கு எதிர்காலத்தின் மீது ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தி பெண்ணை மகிழ்ச்சி அடைய செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here