அவசர அவசரமாக திருமுருகன் காந்தியை கைது செய்தது ஏன்? அவர் அப்படி என்ன தவறு செய்தார்?

0
408

பராசக்தியில் சிவாஜி கணேசன் கேட்பது போல், இவர் செய்த குற்றமென்ன? தமீழனப் பிரச்சனகளுக்கு குரல் கொடுத்தார். எட்டுவழிச் சாலையை எதிர்த்தார். காவிரி உரிமைக்காக போராடினார்,, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களோடு இணைந்து போராட்டம் செய்தார். துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்காக நியாயம் கேட்டார்..

ஐ. நா மனித உரிமை ஆணையத்தில்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் மற்றும் துப்பாக சூடு விவகாரத்தை பதிவு செய்துவிட்டு நேற்று அதிகாலையில் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்த திருமுருகன் காந்தி போலிசாரால் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஏதோ செய்யக் கூடாது பெருந்துரோகத்தை செய்தது போல் அவரை பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

ஒரு அரசு செய்ய வேண்டியதை இந்த மனிதர் செய்ததற்கு நம் தமிழக அரசு செய்த பரிகாரம் என்ன?தேச துரோக வழக்கு. அவர் மீது 124 ஏ கீழ் வழக்கு போட்டுள்ளது. ஐ. நாவில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எதிராக பேசியதாக தேச துரோக வழக்கு போட்டது.

பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு லுக் அவுட் நோட்டிஸ் தரப்படவில்லை, ஆனால் ஐ.நா அமர்வுக்கு சென்று வந்த திருமுருகன் காந்திக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுத்து கைது செய்திருக்கிறார்கள்.

யாரெல்லாம் பிண்ணனி ?

இந்த லுக் அவுட் நோட்டீஸ் மூலம் அவர் எந்த விமான நிலையத்தில் இறங்கினாலும் கைது செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், சில மத்திய மாநில அரசியல் புள்ளிகள் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நீதிபதி சராமரி கேள்வி:

இன்று கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, தமிழக போலீசால் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் இந்த வழக்கில் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்? அவர் தேச விரோதமாக என்ன பேசினார்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள்? பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை? என்று நீதிபதி பிரகாஷ் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here