ராகு காலத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாமா?கூடாதா?

0
70

ராகு காலம் என்பது இந்து மதத்தின் அடிப்படையில் நல்ல நேரம் அல்ல. அந்த சமயத்தில் எந்த நல்ல காரியமும் செய்யக் கூடாது என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நமது தென்னிந்தியாவில் எந்த காரியமும் ராகு காலத்தில் செய்ய மாட்டார்கள். இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், நீங்களாகத்தான்செய்யக் கூடாதே தவிர, தனிச்சையாக நடந்தால் அதனால்
எந்த ஒரு பாதகமும் இல்லை.

ராகு என்பவன் யார்?

ஸ்வரண பானு என்ற அரக்கன்., திருமாலிடம் இருந்து அமிர்தத்தை சுவைக்க மோகினாயாய் உருமாறி வந்தான். அது தெரியவந்து திருமால் அவனை துண்டாக்கும்போது வந்தவர்கள்தான் ராகு மற்றும் கேது என்னும் இருவர்கள் என்று சொல்லப்படுகிறது.

ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் நன்மையா? தீமையா?

கவலைப் படத் தேவையில்லை. மேலே சொன்னபடி, இயற்கையாக ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் அதனால் எந்த பாதகமும் இல்லை. குழந்தையின் நட்சத்திரம், ராசிதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமே தவிர நேரமில்லை.

நல்ல காரியம் தொடங்கலாமா?

முதன்முறையாக நல்ல காரியம், வியாபாரம் தொடங்கும்போது ராகு காலத்தில் தொடங்குவது உசிதமல்ல. ஆனால் இது தினசரி நிகழ்வுகளுக்கு பொருந்தாது. தினசரி அல்லது அடிக்கடி நடக்கும் பிரயாணங்களுக்கு, விஷயங்களுக்கு ராகு காலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏன் தொடங்கக் கூடாது?

அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். இதனால் அவசரப்பட்டு செய்து அதனால் பிரச்சனைகள் வரக்கூடும் என்பதாலேயே ராகு காலத்தில் காரியங்களை தொடங்கக் கூடாது.

ராகு காலத்தை எளிய முறையில் கணிக்க.

சூரிய உதயம் முதல், மறைவு வரை இடையில் உள்ள நேரங்கள் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றரை மணி நேரமாக பிரிக்கப்படுகிறது. இதில் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை எப்போதும் ராகு காலம் வராது. மீதி இருக்கும் காலத்தை கீழ்கண்டவாறு பிரிக்க வேண்டும்.

07.30 – 09.00 -திங்கள்
09.00 – 10.30 -சனிக்கிழமை
10.30 – 12.00 -வெள்ளி
12.00 – 01.30 புதன்
01.30 – 03.00 வியாழன்
03.00 – 04.30 செவ்வாய்
04.30 – 06.00 – ஞாயிறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here