ஏன் கோவிலின் நிலை வாசப்படியை தாண்டி உள்ளே செல்கிறோம்?

0
1220

கோவிலில் இருக்கு படிகளை மிதிக்காமல் தாண்டித்தான் போகச் சொல்வார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

கோவிலுக்குள் சென்று எப்படி கும்பிட வேண்டும் என்பதை கடந்த அனமீகப் பதிவினைப் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனல் இன்னும் சிலருக்கு இந்த விஷயத்தை எதற்கு செய்கிறோம் என்பதே தெரியாது. கோவிலுக்குள் செல்லும் முன் கல கழுவ கோவிலுக்கு முன் தண்ணீர் குழாய் அமைத்திருப்பீர்கள்.

கால்களை குறிப்பாக பாதங்களை நன்றாக கழுவி, தலை மேல் நீர் தெளித்துக் கொண்டு உள்ளே செல்வோம். அதனை எதற்கு செய்வதன்றால் சுத்தமாக கோவிலுக்கு செல்லவே அவ்வாறு செய்யப்படுகிறது. அவ்வாறு கழுவிக் கோண்டு போகும் போது கோவிலின் வாசலில் பெரிய நிலைப்படியை மிதிக்காமல் தாண்டித்தான் போகச் சொல்வார்கள். அது எவ்வளவு அகலமாக இருந்தாலும் அதனை தாண்டி செல்வோம்.

அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், கோபம், பொறாமை, வஞ்சம், செய்த தீமைகளை அங்கேயே வைத்து விட்டு, இறைவனான உன்னை நோக்கி, உன் கருணையும், அருளையும் பெறவும், நேர் மறை வினைகளை பெறவும், வருகிறேன் என்பதைத்தான் குறிக்கிறது.

ஆகவேதான் கோவிலுக்குள் செல்லும் போது, அதன் அகலமான நிலைப்படிகளை தாண்டிச் செல்கிறோம். அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here