1000 வருட பழைமையான மகான் ராமானுஜரின் உண்மையான திருவுடல்!

0
7926

 

ஸ்ரீரங்கத்தில் 1000 வருடங்களாக அருள்பாலிக்கும் ராமானுஜரின் உண்மையான திருவுடல் பற்றிய வியக்க வைக்கும் தகவல்களை இங்கே பாப்போம்.

இறுதி ஊர்வலம்:
இராமனுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்கள் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரந்திரங்களை ஓதினர். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தை தொடங்கியது. திருவரங்கப் பெருமாளைரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

ஆண்டவன் கட்டளை:
இறுதி ஊர்வலம் தொடங்கிய தருணத்தில் அரங்கன் கோயிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாம். ‘இராமானுசன் எந்தன் மாநிதி’ என்றும் ‘இராமனுசன் எந்தன் சேமவைப்பு’ என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமானுஜரின் பூத உடல் என்ற சேமவைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்திலேயே, யதி ஸம்ஸ்கார விதியின் படி திருப்பள்ளிப்படுத்த கட்டளையிட்டார் பெருமாள்.

உடையவர் சன்னதி ரகசியம்:
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்கள் திருப்பள்ளிப்படுத்துவார்கள் இராமானுஜரின் பூத உடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில் திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னதி உள்ளது. இங்கே இராமானுஜர் ஒரு காலில் இன்னோரு காலைப் போட்டு பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரைப்பார்க்கும் போது நேற்றுதான் தியானத்தில் அமர்ந்த திருமேனிபோல் உங்களுக்கு தென்படும்.

ராமானுஜரின் திருமேனி:
ராமானுஜரின் கண்கள் திறந்தே இருக்கின்றன. கால் விரல்கள், நகங்கள், நன்றாக தெரிகின்றன. திருக்கரங்களில் ரோமங்கள் கூட இருப்பதைக் காணலாம். இவரது திருமேனியை பச்சை கற்பூரமும், குங்குமப் பூவும் கொண்ட கலவையினால் மூடி வைத்திருக்கிறார்கள். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக யோகத்தின் மூலமாகத்தோன்றும் அந்த உஷ்ணத்தின் மூலமாக அவரது உடல் இறுகி அப்படியே உரு குறையாமல் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here