ரஜினி புதிய படத்தின் பெயர் ‘பேட்ட’.. இது கார்த்திக் சுப்புராஜ் படம்..!

0
467

 

இளம் இயக்குனர் ரஞ்சித் இயத்தில் தொடர்ந்து கபாலி, காலா ஆகிய 2 படங்களை நடித்த ரஜினி மீண்டும் இதே பாணியில் கார்த்திக் சுப்புராஜ் உடன் சேர்ந்து படம் தயாராகி வருகிறது.

இப்படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

ரஜனி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தைப் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் பல ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சித் படத்தில் ரஜினி அவர்களின் உண்மையின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மயங்கினார்கள்.

இது மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினி சமுகப் பிரச்சனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியமான தளத்தையும் கையாண்டு இருந்தார். இதைத் தொடர்ந்து தான் தற்போது ரஜினிகாந்த் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்துள்ளார்.

இந்தப் படம் தற்போது பேட்ட என்ற பெயர் உடன் மோஷன் பிக்சர் வாயிலாக வெளிவந்துள்ளது.

மோஷன் பிக்சர்-ஐ பார்க்கும் போது ரஜினி கிரே ஹேர் உடன் இளமையுடன் தெரிகிறார். மேலும் இந்தப் படம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியை பார்த்துப் போர் அடித்தவர்களுக்கு இது விருந்தாக இருக்கும் எனத் தெரிகிறது.

இப்டத்திற்கு அனிருத் இசையமைக்க. ரஜினி உடன் சிம்ரன், நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, திரிஷா, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here