தோனியை சீண்டி பார்க்கும் ரெய்னா!

0
703

ரெய்னா தோனியை விமர்சித்து கருத்து தெரிவித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி நீங்கள் நினைப்பது போல் இல்லை கேமிர முன் நடிகிறார். தோனி அவரை கூல் கேப்டன் என்று கூறமுடியாது என்றுள்ளார்.

கோபம் வரும்

எப்போதும் கேமராவுக்கு முன் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் கண்களில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் டிவியில் இடைவேளை போடும் சமயங்களில் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் எல்லாம் வரும். அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது என்று கூறினார்.

பதிலளித்துள்ளார் தோனி

இந்நிலையில் ரெய்னாவின் சொன்ன கருத்துக்கு பதிலளித்துள்ளார் தோனி. விளையாடுவது கிரிக்கெட்டாக இருந்தாலும் இது மிகவும் சீரியஸாக விஷயம். இது ஒன்றும் விளையாட்டுதனமான விஷயம் இல்லை. அப்படி இருக்கும் போது யாராவது தவறு செய்தால் கோபம் வரத்தான் செய்யும். நானும் கோபத்தை எப்படி வெளிக்காட்டாமல் இருக்க முடியும்.

நான் அதற்காக எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் என்னைப் போல ஒரு காமெடியான நபரை பார்க்க முடியாது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மட்டும்தான் நான் இது போல கோபப்படுவேன் என்று ரெய்னாவின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார் தோனி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here