மழை நீரை சேமித்தால் பத்தே ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் தீரும்: நீங்கள் சேமிப்பீர்களா?

0
890

ருவமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்புவது ஒரு பக்கம் இருந்தாலும், சென்னையில் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கமாக உள்ளது. பருவமழை காலங்களில் நமக்கு கிடைக்கும் மழையை நாம் இயன்றவரை சேமித்து வைத்துக்கொண்டாலே தண்ணீர் பிரச்சினையிலிருந்து நிச்சயமாக தப்பித்துக்கொள்ளமுடியும். மேலும் நம்முடைய நிலத்தடி நீர்மட்டத்தையும் நம்மால் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அரசாங்கம் என்ன சார் செய்யுது? என கேள்வி எழுப்பி நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதை விட, நம்மால் முடிந்த அளவுக்கு மழை நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது நல்லது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தாலும், மழை நீர்சேகரிப்பு தொட்டி மற்றும் உபகரணங்களை நிறுவியிருந்தாலும் நம்மால் இன்னும் தண்ணீர் பிரச்சினையிலிருந்து மீள முடியவில்லை. இக்கட்டுரையில் மழை நீரை இன்னும் எப்படியெல்லாம் சேமிக்க முடியும் என பார்க்கலாம்.

மழைநீர் தொட்டிகள்:

இந்த முறையை நம் வீட்டுக்குள் இருந்தே செயல்படுத்த முடியும். மொட்டை மாடியில் அல்லது வீட்டின் மேற்கூரையில் விழும் மழை நீரை, பிரித்யேக செயற்கை வழித்தட வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து, அதை பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் நிரப்பிக்கொள்ளலாம். இம்மாதத்தில் அதிசயமாக 100 மி.மீ. மழை கிடைக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். எனவே கிடைக்கும் மழையை குறைந்தது 5 பேரல்களில் சேமித்து வைக்கும்போது 5, 6 வாரங்களுக்கு அந்த நீரை பயன்படுத்த இயலும்.

கால்வாய்களுக்கு அனுப்பலாம்:

காடு அல்லது வயல்வெளிகளில் பொழியும் மழையை கால்வாய்கள் அமைத்து ஓடைகளுக்கு கொண்டு சேர்க்கலாம். ஓடை வழியாக ஆறுகளுக்கும், ஆறுகள் மூலமாக அணைகளுக்கும் தண்ணீர் சென்றடையும். இதன் மூலம் விவசாயமும் செழிக்கும். இயற்கையான முறையில் மழை நீரானது நிலத்தடி நீரோட்டத்துடனும் இணையும். இதனால் காணாமல்போன நிலத்தடி நீர்மட்டம் திரும்பக் கிடைக்கும். விவசாயத்திற்கும், நகர்புற குடிநீர் தேவைக்கும் பெரிதும் உபயோகமாக இருக்கும். மழை நீர் சேகரிப்பு பணிகளை இளைஞர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டு இயற்கையை காத்திட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here