அடித்தது ஜாக்பாட்.. ரயில்வே துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

0
571

இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்கள் பணியாற்றும் ஒரு அமைப்பு என்றால் அது ரயில்வே துறை தான், சொல்லப்போனால் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பும் ரயில்வே துறை தான்.

இத்துறையில் சுமார் 12 லட்சம் பேர் இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் நிலையில் ஒவ்வொரு வருடமும் 40000 முதல் 50000 பேர் ஓய்வு பெறும் நிலையில். இதைக் கணக்கில் கொண்டு அடுத்த 2 வருடத்தில் சுமார் 2.3 லட்சம் பேருக்கு இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் ஏழ்மையான உயர் சாதிமக்களுக்கு அறிவிக்கப்பட்ட சதவீத இடஒதுக்கீடும் இந்த வேலைவாய்ப்பில் சேர்க்கப்படும் எனக் கோயல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்கம் செய்த அரசு அமைப்பாக ரயில்வே துறை உள்ளது.

ஏற்கனவே மத்திய ரயில்வே துறை 1.5 பேரை பணியில் அமர்த்தும் பணிகள் மார்ச் – ஏப்ரல் காலத்தில் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அடுத்த 2 வருடத்தில் ஓய்வுபெறுவோர், காலியாக உள்ள இடங்கள், ஒவ்வொரு வருடமும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனப் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ரயில்வே துறையில் ஆட்கள் பற்றாக்குறை இல்லாத வகையில் முன்கூடியே ஆட்களைப் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகத் தலைவர் விகே யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த 4 லட்ச வேலைவாய்ப்புகளில் 1.31 லட்ச பணிகளுக்கான ஆட்கள் நிரப்பும் பணி பிப்ரவரி – மார்ச் மாதத்தில் துவங்கும் என்றும், மொத்த பணிகளும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதத்தில் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here