10 நாள் டைம், அதுக்குள்ள ரபேல் விமான விலை சொல்ல வேண்டும்.. மத்திய அரசுக்கு உத்தரவு..!

0
383

பல்வேறு பிரச்சனைகளும் குழப்பத்திற்கு மத்தியில் இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே நடந்த ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்தும் ரபேல் விமானத்தின் விலை குறித்தும் மத்திய அரசும் சரி, பாதுகாப்புத் துறை அமைச்சகமும் எவ்விதமான தகவல்களையும் வெளியிடமாட்டோம் எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடுத்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் அடுத்த 10 நாட்களுக்குள்ள ரபேல் போர் விமானத்தின் விலை மற்றும் ஒப்பந்தம் குறித்து முழுமையான விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ராஜன் கோகோய், யூயூ லலித், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட பென்ச் மனுக்களின் படி மத்திய அரசை இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களைப் பொது வெளியில் கொண்டு வர வேண்டும் அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையில் அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் கூறுகையில் ரபேல் விமானத்தின் விலை மற்றும் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் அனைத்தும் இந்திய அரசின் ரகசிய சட்டத்தின் கீழ் வருகிறது என்ற தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த உச்ச நீதிமன்ற பென்ச், ரபேல் விமானத்தின் விலையைக் குறித்த விபரத்தை நீதிமன்றத்திற்குச் சீல் வைத்த கவரில் அளிக்க முடியவில்லை எனில் அஃபிடவிட் ஆகச் சமர்ப்பிக்கட்டும் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் மனு கொடுத்த பிரசாந்த் பூஷன், தகவல்களை அளிக்கவில்லை எனில் இந்தப் பிரச்சனையைச் சீபிஐ விசாரணைக்குச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார், இதற்கு உச்ச நீதிமன்றம் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here