ருசியான கர்நாடக ஸ்டைல் முள்ளங்கி சட்னி! சாப்பிட்டா அப்றம் விடவே மாட்டீங்க!!

0
180

முள்ளங்கியை பொரியல் செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க, சாம்பார் செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க.
ஆனா சட்னி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா? எப்பவும் போரடிக்கிற மாதிரி முள்ளங்கியை
ஒரே மாதிரி செஞ்சு கொடுத்தா பிள்ளைங்க சில சமயம் சாப்பிடவே மாட்டாங்க. ஒரு
சேஞ்சுக்கு சட்னி செஞ்சு கொடுங்க அதுவும் சுவையான யம்மியான புளிப்பும் இனிப்பும்
கலந்த கர்நாடக ஸ்டைல்ல.

இந்த முள்ளங்கி சட்னியை சப்பாத்தி தோசைக்கும் சூப்பரா இருக்கும். சுடு சாதத்தில்
பிசைஞ்சு சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும். செய்யவும் ஈஸி.

அப்றமென்ன கத்துக்கோங்க!!முள்ளங்கி நிறைய நார்ச்சத்து நிறைந்தது. சிறு நீரக கற்களை கரைக்க வல்லது.

தேவையானவை :

முள்ளங்கி துருவியது – 1 கப்
சின்ன வெங்காயம்- 5
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – கால் ஸ்பூன்
புளி- சின்ன நெல்லிக்காய் அளவு
கொத்துமல்லி- சிறிதளவு
காய்ந்த மிளகாய்- 4
பூண்டு -2 பல் (தேவைப்பட்டால்)

 

செய்முறை :

முதலில் வாணிலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய் அவற்றை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் அதே வாணிலியில் வெங்காயம் மற்றும் முள்ளங்கி, கொத்துமல்லி, புளியை சேர்த்து பச்சை வாசனை முழுவதும் போகும்படி வதக்கி அதன் பின் எல்லா
பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வள்வுதாம்.

தாளிக்க :

நல்லெண்ணெயில் சிறிது கடுகு, கருவேப்பிலை, மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம்
சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டுங்கள்.

இந்த வாசனையான சட்னி உங்க பசியைத் தூண்டும். உங்களுக்கு காரம்
வேண்டுமென்றால் இன்னும் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here