மீண்டும் சபரி மலை ஐயப்பன் கோவில் திறப்பு!மீண்டும் பதட்டமான சூழ்நிலை !

0
1860

உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடுத்து, பெண்களும் சபரி மலைக்கு செல்லலாம் என்று அரசு சொன்னதும், சென்ற மாதம் சபரி மலையில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருந்தது. 144 தடை உத்தரவு போடப்பட்டு, இன்று முதல் மீண்டும் சபரி மலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் போலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண் போலிஸ் 50 வயதிற்கு மேல்தான் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுப்பு. இ ந் நிலையில் அஞ்சு என்ற 30 வயது மதிப்பிடத்தக்கப் பெண் கோவிலுக்கு செல்ல முயன்ற போது, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, கோவிலுக்கு உள்ளே செல்ல விடாமல் தடுத்து, அனுமதி தர மறுத்து விட்டனர்.


நடைப் பந்தல் அருகே எல்லா ஐய்யப்ப பக்தர்களும் முற்றுகை இட்டு ஐம்பது வயதிற்கும் குறைவாக உள்ள பெண்கள் உள்ளே வர முடியாதபடி முற்றுகை இட்டுள்ளனர்.

அவ்வாறு வரும் பெண்கள் ஐம்பது வயதிற்கு மேல் இருந்தால், அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின் பக்தர்கள் உள்ளே அனுமதி தருகின்றனர்.

நேற்றிலிருந்து 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போலிசார் கண்காணிக்க அமர்த்தப்பட்டுள்ளனர், 20 கமாண்டோ படையினர் அங்கு குவிந்துள்ளனர்.

நிலக்கல் முதல் கோவில் சன்னிதானம் வரை ஆயிரக்கணக்கான சிசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு பக்கம் தீவிர கண்காணிப்பு, ஒரு பக்கம் பக்தர்களின் எதிர்ப்பு, இன்னொரு பக்கம் பெண்கள் உள்ளே நுழைய போராட்டம் என மீண்டும் சபரி மலை பரபரப்பாகவும் பதட்ட நிலையிலும் காணப்படுகிறது. எல்லாம் அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here