நிர்மலா தேவி அப்படி பேசியது ‘அவருக்காக’ தானா? உடையும் உண்மை!

0
3494

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் தகாத விதத்தில் பேசிய விவகாரம் நெருப்பாக பரவியுள்ளது. நிர்மலா பேசிய அழைப்பு பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்அப் மூலம் பரவி இருக்கிறது. இந்நிலையில் அவர் குறிப்பிட்ட அந்த ‘உயர் அதிகாரிகள்’ யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வரும் அந்த தனியார் கல்லூரியில் கணித பேராசிரியையாக பணியாற்றி வரும் நிர்மலா தேவி என்பவர், மாணவிகளிடம் தொலைப்பேசி அழைப்பில் தகாத விதமாக பேசி இருக்கிறார். அதாவது தன்னிடம் படிக்கும் சில மாணவிகளை, உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கிறார்.

அப்பாவி மாணவிகளிடம் கண்ணா கண்ணா என விஷம் கலந்த ஆசை வார்த்தைகளை பிரயோகித்து, அவர்களின் மனதை மாற்றி இந்த மாபாதக செயலுக்கு மெல்ல இழுக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த செயலில் ஈடுபட்டால் எண்பத்து ஐந்து விழுக்காடு மதிப்பெண்ணுடன், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பணம் தருவதாக ஆசை வலை விரிக்கிறார். இதை அம்மாணவிகள் புத்திசாலி தனமாக ஆடியோ பதிவு செய்துள்ளனர்.

இடையிடையே நிர்மலா தேவி, அம்மாணவிகளிடம் தான் உயர் அதிகாரிகளிடத்தில் அந்தஸ்து பெற்றவர் என பெருமை பேசுகிறார், அந்த உயர் அதிகாரிகளிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டால் எல்லா வசதிகளையும் செய்து தருவதாகவும், இது ஒரு வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார். மாணவிகள் உடனே இது வேண்டாம், எங்களுக்கு தேவை இல்லை என நிராகரிக்க, நிர்மலா தேவி விடாபிடியாக பேச்சினை தொடர்கிறார். இது ஒரு வாய்ப்பு என மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

ஒரு வாரம் வீட்டில் கலந்து பேசிவிட்டோ அல்லது தாங்களாகவோ முடிவெடுத்துவிட்டு சொல்லுங்கள் என நிர்மலா நிர்பந்திக்கிறார். இந்த தொலைப்பேசி ஆடியோ தற்போது வெளியாகி இருக்கும் சூழலில், நிர்மலா குறிப்பிட்ட அந்த ‘உயர் அதிகாரிகள்’ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் உயர் அதிகாரிகளுக்காகதான் இந்த வேலையை பார்த்துள்ளார் என்பது தெளிவு படுகிறது.

உயர் அதிகாரிகளுக்கு சில வசதிகளை செய்து கொடுத்தால், கல்லூரிக்கு தேவையான வசதிகள் எல்லாம் கிடைக்கும். வேண்டிய அனுமதிகள் கிடைக்கும் என்ற சம்பிரதாயங்கள் காலம் காலமாக நடந்து வருகின்றன. பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து ஆய்வுக்காக வரும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இம்மாதிரியான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

கொஞ்சமும் கூட கூச்சநாச்சம் இன்றி புரோக்கரைப் போல பேசும் நிர்மலாதேவி, எந்த உயர் அதிகாரிக்காக இப்படி பேசினார் என்பதை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது மதுரை பல்கலைக்கழகம். உயர்மட்ட குழுவில் உள்ள அந்த கருப்பு ஆடு பிடிபடுமா அல்லது தப்பி ஓடவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here