இஞ்சி,சுக்கு, கடுக்காய் எப்படி எந்த நேரத்துல சாப்பிடனும் தெரியுமா? சித்தர் சொல்லும் ரகசியம்!!

0
185

நமது உடல் வாதம் பித்தம் கபம் போன்ற வாயுக்களை அடிப்படையாகக் கொண்டது. காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் சாப்பிட்டால் தீர்க்க ஆயுளுடன்
நோய் நொடி இல்லாமல் வாழலாம் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது.

நாம் சாப்பிடும் உணவில் நன்மைகளோடு நஞ்சும் கலந்திருக்கும். அவைகள் குடலிலேயே தங்கிவிட்டால்தான் பலவித நோய்க்ளுக்கும், மரபுக் கோளாறுகளுக்கும்
காரணமாகிறது. நச்சுக்களை அகற்றவும், வாயுக்களை சமன் செய்யவும், இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகிய மூன்றும் ஒப்பில்லா அற்புதங்களை தருகின்றது என்றால்
மிகையில்லை.

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. இந்த மூன்றையும் சமனமாகிவிட்டால் உடல் சம நிலைப் பெறத் தொடங்கும். இதனால் தேக ஆரோக்கியம் மிளிரும்.

உண்ணும் முறை :

காலை :

காலையில் இஞ்சிச்சாறு மூன்று ஸ்பூன் எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் :

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவு:

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுடு நீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக
இளகிப் போகும்.

இதன்படி சாப்பிட்டு வந்தால் நோய் நொடி, சோர்வு இல்லாமல் உடலில் இளமையுடன் புத்துணர்ச்சி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here