சென்னையில் தனியார் கழிவு லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!

0
115

தென் சென்னை பகுதியில் 1500க்கும் மேற்பட்ட தனியார் கழிவு லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பெருங்குடியில் இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கழிவுகளைக் கொண்டு செல்ல 100 ரூபாய் மட்டுமே அளிக்கப்படுவதாகவும், அதை 250 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தை எதிர்த்துத் திங்கட்கிழமை மதியம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றம் அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் 2 மாதத்திற்கு முன் தனியார் தண்ணீர் லாரிகள் 3 நால் போராட்டத்தில் ஈடுபட்ட போது மொத்த நகரமும் ஸ்தம்பித்துப் போனது. குறிப்பாக ஓஎம்ஆர் பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளை நம்பிதான் உள்ளனர்.

சென்னையில் இந்தத் தனியார் கழிவு லாரிகள் தான் ஹோட்டல், அடுக்கமாடி குடியிருப்புகள், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், ஓஎம்ஆர் எனப் பல பகுதிகளில் இருந்து குப்பைகளை மற்றும் கழிவுநீரை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்குக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு லாரியும் 6000 முதல் 9000 லிட்டர் கழிவுகளை அகற்றிக்கொண்டு வருகிறது, இதற்கு 100 ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது, இந்த அளவீட்டை அதிகரித்து 250 ரூபாய் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here