‘ழ’ சொன்னால் நீண்ட நாள் உயிர் வாழலாம்… ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

0
3398

சர்வதேச மேடையில் உலகின் வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை நம் தமிழ் மொழிக்கு கிடைக்கிறது. காரணம் தமிழ் உலகின் மூத்த மொழி. தனிமொழி. பிறமொழி கலப்பு சிறிதளவும் இல்லாமல் தனித்து செழித்து வளரக்கூடிய செம்மொழி. தமிழ் உயிர்மொழி. ஆம், உயிரை நீண்ட நாட்கள் வாழச்செய்யும் மொழி.

‘ழ’கரத்தின் சிறப்பு:
உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லாத எழுத்து ‘ழ’. இந்த உச்சரிப்பை வேறு எம்மொழியிலும் கண்டுவிட முடியாது. எந்த நாட்டவராலும் உச்சரிக்க முடியாது. மலையாளிகளைத் தவிர. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து சென்றதால் அதிலும் ழகரம் பயன்பாட்டில் உள்ளது. இந்த ‘ழ’கரத்தை உச்சரித்தால் நீண்ட நாட்கள் உயிர்வாழலாம் என சித்தவாக்கு கூறுகிறது.

புருவத்தில் அறிவியல்:
புருவ நடுவில் நாடு நாடியாகிய சுழுமுனையில் சூரிய கலையும், சந்திரகலையும் ஒடுங்கும்போது சுவாசம் மிகவும் குறைந்து காணப்படும் சுவாசம் குறைந்து, குறைந்து இயக்கம் இல்லாமல் மனமும் ஒடுங்கும் அப்போது புருவ மையத்தில் தியானம் தொடர்ந்து நடைபெற்றால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ இயலும் என்பதை நினைவூட்டுவதர்கற்காகவே நெற்றிநடுவில் திலகமிடுதல் ,திருநீறு அணிதல், திருமண் இடுதல் போன்ற மரபுகள் தோன்றின.

'ழ' சொன்னால் நீண்ட நாள் உயிர் வாழலாம்... ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்!‘ழ’கர ரகசியம்:
தமிழ் மொழியை பேசுவதாலும் ஆயுள் நீடிக்கும் திருமூலரின் திருமந்திரத்தில் “ழ” என்கிற எழுத்தை உச்சரிக்கும் போது நாவின் நுனி வளைந்து மேல் நோக்கி அங்குள்ள மேலண்ணத்தை தொடுகிறது தமிழ் எழுத்தான “ழ்”லை உச்சரிக்கும் போதே ஆயுளை நீடிக்கும் நுணுக்கமான யோகா முறை திருமந்திரத்தில் காணமுடிகிறது.
“சாவதும் இல்லை சதாகொடி ஊனே ழகரம்”

தமிழ் அமிழ்து:
தமிழை அமிழ்து என போற்றுவார்கள். (அமிழ்து = அமிர்தம்). அமிர்தம் எனப்படுவது சாகாத வாழ்வை பெற வைக்கும் உணவாகும். எனவேதான் தமிழ் அமிழ்து. தமிழ் என்ற சொல்லிலேயே சாகாக்கலையின் முத்திரையை காணமுடிகிறது . சாகாக்கலையை பயில அடிப்படையாக இருப்பது சித்தர்களின் பாடல்கள் தமிழர் அறிவியலை போற்றி வளர்த்தெடுத்தன. ஆனால் இந்து மத நுழைவின்போது சித்த நெறிகள் அனைத்தும் மறைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here