நீங்க பிறந்த கிழமை சொல்லுங்க! உங்க குணத்தை சொல்றோம்!

0
4376

நீங்கள் பிறந்த தினத்திற்கு என பொதுவான குன நலன்கள் உண்டு. ஒவ்வொரு கிழமைக்கும், ஒவ்வொரு குணம் மற்றும் ஆதிக்கம் உண்டு, வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் ஏதேனும் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் பெற்றிருப்பதால், அந்தந்த கிழமையில் பிறந்தவர்களுக்கென ப்ரத்யோக குண நலன்களை பெற்றிருப்பார்கள். அவ்வாறு உங்கள் பிறந்த கிழமைக்கும் இங்கே சொல்லப்பட்டுள்ள குண நலன்களுக்கும் ஒத்துப் போகுதா எனப் பாருங்கள்.

ஞாயிறு கிழமை :

உல்லாச பயணங்களில் ஈடுபடுவது இந்த கிழமைகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களிய எளிதாக எடை போடுவரகள். ஆனால் செய்யும் காரியங்களில் அரைகுறையகச் செய்வதுதான் இவர்களின் பெரிய மைனஸ்.

திங்கள் கிழமை :

திங்கல் கிழமையில் பிறந்தவர்கள் அலட்டிக் கொள்ளாமல் காரியங்களை செய்து முடிப்பார்கள். எதனையும் ஆக்கப் பூர்வமாக சிந்தித்து செயல்படுபவர்கள். நல்ல அறிவுத் திறனை கொண்டிருப்பவர்கள். கலைத் துறையில் ஈடுபாடு அதிகம் கொண்டிருப்பார்கள்.

செவ்வாய் கிழமை :

வீரமும், அறிவும் ஒரு சேர பெற்றவர்கள் செவ்வாய் கிழமை பிறந்தவர்கள்.
எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள். எதனையும் எதிர்த்து போராடி வெற்றி பெருபவர்கள். எந்த விஷயத்திலும் சுய முடிவை எடுப்பதையே விரும்புவார்கள்.

புதன் கிழமை :

இந்த கிழமையில் பிறந்தவர்கள் புதுமையை விரும்புவர்கள். அடிக்கடி தங்களது எண்ணங்களை திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தி சாதூர்யம் மிக்கவர்கள். இலக்கியம், கலை, இசை போன்ற துறைகளில் நாட்டம் கொண்டவர்கள்.

வியாழக் கிழமை :

ஒரு காரியத்தை செய்வதற்கு முன் பல முறை யோசிப்பவர்கள் வியாழக் கிழமை பிறந்தவர்கள். இவர்கள் அதிக கோபம் கொண்டவர்கள். சமாதானப் படுத்துவது சிரமம். பெரிய பொறுப்புகளில் இடம் பெற்றிருப்பார்கள். நிறைய பொறுமை உண்டு. பெரியவர்களை மதிப்பார்கள்.

வெள்ளிக் கிழமை :

இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு செல்வம் நிறைய இருக்கும். கலை, இலக்கியத்தில் ஈடுபாடு பெற்றிருப்பார்கள். எல்லா விஷய ஞானமும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு தெரியாத விஷயங்க்ள் இல்லை என்று சொல்லலாம். மற்றவர்களை கிண்டல் செய்வது அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கும்.

சனிக் கிழமை :

இந்த கிழமையில் பிறந்தவர்கள் எதற்கும் கலங்க மாட்டார்கள். மற்றவர்களளை அதிகாரமிடும் பணிகளில் இருப்பார்கள். மனதை அடக்கி ஆளும் வித்தை கற்றருந்திருப்பார்கள். சேமித்து வைக்கும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது.. இனிமையாக குணம் பெற்றிருந்தாலும் வெளியே பார்ப்பதற்கு கடினமானவர்களாக தோற்றம் அளிப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here