குருப்பெயர்ச்சி இந்த வருஷம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரப் போகுது?

1
13777

குரு 12 மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயர்கிறார். அதாவது  ஜாதகக் கட்டத்தை அவர் பயணம் செய்ய எடுத்துக் கொள்ளும் காலம்  ஒரு ஆண்டு. நாளை அக்டோபர்-4 ஆம் தேதி, வியாழக் கிழமை குருப்பெயர்ச்சி ஏற்படுகிறது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் எனப் பார்க்கலாம்.

மேஷம் :

குருப்பெயரச்சி நன்மை, 7- 8 விருச்சிகம் நகர்கிறார். கடந்த ஒராண்டு காலம் நல்லதை செய்தார். 8 ஆம் இடம் நன்மைகளை தொடர்ந்து செய்வார். சென்ற வருடம் நன்மைகள் உடனக்குடன் கிடைக்கும். ஆனால் இப்போது எந்த வெற்றியையும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பெற வேண்டியது இருக்கும். வெள்ளை , சிவப்பு நிறம் அதிர்ஷ்ட நிறமாக இந்த ஆண்டு இருக்கும்.

ரிஷபம் :

இந்த குருப்பெயர்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் சரிவில் இருந்த நிலையில் இருந்து வீறு நடை போட்டு நடக்கும் காலம் இது. வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும், மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நடக்கும். அற்புதமான ஆண்டாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும். பச்சை ஆரஞ்சு ஆகிய நிறங்கள் இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

மிதுனம் :

கடந்த ஆண்டு மிகவும் நன்றாக இருந்திருக்கும். மிகவும் சந்தோஷமான செயல்பாடுகளுடன் சென்ற ஆண்டு அமைந்திருக்கும். இந்த வருடம் கொஞ்சம் கடினமான போக்குதான். உடல் நலம் சற்று பாதிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும்.

ஆலங்குடி ஒருமுறை சென்று வந்தால் நல்ல வழி கிடைக்கும். அப்படி செல்ல முடியாத சமயத்தில் வீட்டிற்கு அருகிலேயே உள்ள நவகிரஹ கோவிலுக்கு சென்று வரலாம். முடிந்தவரை கோதுமையால் ஆன உணவுகளை தயாரித்து ஏழைகளுக்கு அன்னதானம் தரலாம். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷட்ம் தரும் நிறமாக அமையும்.

கடக ராசி :

குருபகவான் பஞ்சமம், அதாவது 5ஆம் இடத்தில் இடம் பெயர்கிறார். இது நாள் வரை இருந்த சஞ்சலங்கள், கலக்கங்கள் மறையும். மன நிறைவுடன் இந்த ஆண்டு இருக்கும், சந்தோஷம் குதூகலம், கடினமான செயல்களையும் எளிதான சாதிக்கும் ஆற்றல், நீண்ட, வலுவான வாழ்க்கைப் பாதை நடை, பொருளாதார நிலை அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு தரும். சிவப்பு, கருப்பு ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.

சிம்ம ராசி :

சிம்ம ராசி அன்பர்கள் 4 ஆம் இடத்திற்கு இடம் பெயர்கிறார். பிராயாணங்கள் அதிகமாகும். பழைய வாகனங்கள் விற்று புது வாகனங்கள் வாங்க ஏதுவான காலம் இது. வெற்றி கிடைக்கும் காலம். மேல் நாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நீலம், பிரவுன் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.

கன்னி ராசி :

இப்போது 3 ஆம் இடத்தில் இடம் பெயர்ந்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் மூலமாகவும் உதவிகள் கிடைக்கும் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். சிறப்பான குருப்பெயர்ச்சி காலம் இது. நீலம் மற்றும் சிவப்பு ஆகியவை அதிர்ஷ்ட தரும் நிறங்கள்.

துலாம் :

கடந்த காலம் தொல்லைகள் அதிகமாக இருந்திருக்கும். வாழ்க்கையில் முன்னேற விடாமல் இழுத்து பிடித்திருக்கும். இன்று குருப்பெயர்ச்சி தன ஸ்தானத்தில் அமைந்திருக்கிறார். வாழ்வில் புது வசந்தம் கிடைக்கப் பெறுகிறது. அற்புத அமைப்பு கொண்ட குருப்பெயர்ச்சியாக ஆகின்றது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சிறப்பான ஆண்டாக அமையும். பிள்ளைகள் படிப்பு சிறப்பகா இருக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ஆகியவை.

விருச்சிகம் முதல் மீன ராசி வரை, நாளை குருப்பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here