மகளை கொலை செய்வதுதான் தமிழர் பண்பாடா?… ‘கௌசல்யாவின் அப்பா’ கவிதைக்கு கண்டனம்!

0
4171

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் நேற்று திருப்பூர் நீதிமன்றம் ஆறு பேருக்கு தூக்கு தண்டனையை அளித்து அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. மரண தண்டனை குறித்து இங்கே பெரும்பாலோரின் பார்வை வேறாக இருந்தாலும், இந்த தீர்ப்பு சாதி வெறி பிடித்த மிருங்கங்களுக்கு கைவிலங்கு போடும் தீர்ப்பாக அமைந்திருக்கிறது. கௌசல்யாவின் இழப்பிற்கு நீதி கிடைத்துவிட்டதை எண்ணி பலரும் திருப்தி அடைந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ‘கௌசல்யாவின் அப்பா நான்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை சுற்றிவருகிறது. நடந்துள்ள சம்பவத்திற்கு எதிர்மாறாக பாசத்தையும், அன்பையும் கலந்து எழுதப்பட்ட இக்கவிதையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த கவிதை இங்கே..

த்தித் தவழும் வயதில் நீ-பசியில் கத்திக் கதறும் போது உன்னைக் குத்திக் கொலை செய்யவா நினைத்தேன்!இல்லை…
தாயின் ரத்தத்தைப் பாலாக்கியன்றோ கொடுத்தேன்!

பிஞ்சுக் கால்களால் என் நெஞ்சில் உதைக்கையில் வெட்டிப் போடவா துடித்தேன்.! இல்லை…
கட்டித் தழுவியன்றோ அணைத்தேன்!

காதைத் தொடும் வயது வந்ததும் காண்வென்ட்டிலே சேர்த்தேன்;
அழுத உன்னை விட்டுப் போக மனமின்றி மாலை வரை கதவு ஓட்டையில் எட்டிப் பார்த்தபடி கால்கடுக்க நின்று
தோல் மீது சுமந்து வந்தேன்.!

பூப்படைந்து பெரியவளாகி
பாவடை தாவணியில் என் முன்னே வந்து;அப்பா…. என்ற போது
என் குல தெய்வம் நீயென்று குதித்தேன்…
ஆனந்தக் கண்ணீரிலல்வா குளித்தேன்.!

கழுத்துக்குச் சங்கிலியோடு
காதுக்கு தோடும்;
காலுக்குக் கொலுசோடு
கைக்கு வளையல்களும்;
தாம்பூழத் தட்டெடுத்து தாய்மாமன் வருகையிலே…
தமிழர்தம் பண்பாட்டை எண்ணிப் பெருமிதத்தில் திளைத்தேன்….

அடக்கத்தில்
ஒழுக்கத்தில்
படிப்பில்
பண்பாட்டில்
கலாச்சாரத்தில்
நீ – சிறந்தவளென்று
ஊர் சொல்லும் போது
நான் நல்ல தகப்பனென்று உணர்ந்தேன்…!

நீ சொல்…
இல்லை காதலர்கள் யாரோ சொல்லட்டும்….
சாதிக்காக மட்டுமா நான்
கத்தி எடுத்தேன்…
அதற்க்காக மட்டுமா நான்
அரிவாள் பிடித்தேன்…

நோட்டு பேனாவுக்காகவும்
சோப்பு சீப்புக்காகவும்
உணவுக்கும் உடைக்காகவும்
நம்மை எதிர்பார்த்தவள்
கழுத்தின் மாலைக்காக
கைகழுவி விட்டாளே???
என்றா கோபப்பட்டேன்..!
இல்லை…

தமிழ்ப் பண்பாட்டில் கலாச்சாரத்தில் ஊரி வளர்ந்த நான்- நீ
படித்து சாதிப்பாய் என்று நினைத்தேன்…
பலருக்கும் நல்லதை போதிப்பாய் என்று நினைத்தேன்…

ஆனால்…
என்னை இப்படி
சிறையில் தள்ளி
சோதிப்பாய் என்று
எப்போதும் நினைத்ததில்லை….

காதலென்பது காமத்தின் எச்சமென்றும்
பருவக் கவர்ச்சியின் உச்சமென்றும்
உணர முடியாத வயதிலுள்ள நீ
வழி தவறிடக் கூடாதென்றெண்ணி நான் செய்ததெல்லாம் உனக்குத் தவறாகத்தான் தோன்றும்…!

நீ இப்போதும்
நம் குடும்பத்தைக்
குழி தோண்டிப்
பழி வாங்கிடத் துடிக்கிறாய்…
நாங்கள் பாசத்தில் உன்னைப் பலிகடாவாக்கி
பலி பீடத்தில் ஏறி நிற்க்கிறோம்…!

என்னைத் தூக்கிலே போட்டாலும்
என் துக்கம் என்னவோ
என் குல தெய்வமே….
உன் வாழ்வு என்னாகுமோ….???”

கௌசல்யாவின் குடும்பம் தமிழ்ப் பண்பாட்டில் கலாச்சாரத்தில் ஊரி வளர்ந்ததாக வர்ணித்து எழுதப்பட்டிருக்கிறது இந்த கவிதை. சாதி வன்மமும், பெற்ற மகளை கொலை செய்வதும்தான் தமிழர் பண்பாடா? கலாச்சாரமா? என கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது இந்த கவிதை.

கவுரவக் கொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here