வியக்க வைக்கும் ராணுவ தளவாடங்கள்: மோடி திறந்து வைத்தார்!

0
406

திருவிடந்தையில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சியின் துவக்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பின் அவர் தடவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விண்கலங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை உறவாடும் நாடுகலாவே பாகிஸ்தானும், சீனாவும் இருக்கின்றன. சீனா 1962ம் ஆண்டு இந்தியா மீது போர் தொடுத்தது. அதன் பின் இந்தியாவுடன் எந்த நேர்க்களப் போரிலும் சீனா பங்கேற்கவில்லை என்றாலும் இந்தியா மீது தொடர்ந்து மறைமுக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது சீனா.

போரின்போது காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் கிலோ மீட்டர் நிலப்பகுதியை இன்னும் கூட திருப்பித்தர மறுக்கிறது சீனா. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இரண்டுமே முழுக்க முழுக்க தங்களுக்கே சொந்தம் என பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறது. அடிக்கடி இந்திய எல்லைகளுக்குள் ஊடுருவி தாக்குதல்கள் அல்லது சேதங்களையும் உருவாக்குகிறது. மேலும் இந்திய நிலத்தில் சீன கொடிகளை நிர்மாணித்து சொந்தம் கொண்டாடுகிறது அந்நாட்டின் ராணுவம்.

குறிப்பாக மறைமுகமாக இந்திய ராணுவ இணையதளங்களில் ஊடுருவி, உள்ளிருக்கும் முக்கிய ஆவணங்களை, தகவல்களை திருடி அழித்தும் விடுகிறது. எல்லைப்பகுதிகளில் சாலை அமைத்து நெருக்கடி சூழலை உருவாக்குகிறது. வடக்கில்தான் இப்படி செய்துகொண்டிருக்கிறது என்றால், தெற்கிலும் தன் வேலையை செவ்வனே செய்கிறது சீனா.

இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது. சிங்கள ராணுவத்திற்கும், அந்நாட்டின் வளர்ச்சிக்கும் எண்ணற்ற சிறு உதவிகளை செய்து வருகிறது. துறவிகளுக்கும் கூட ஆயுத பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடல் பரப்பிலும் தாராளமான இடத்தை சீன கப்பல் தளவாடங்களுக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறது இலங்கை அரசு. அங்கே சில சாலைகளுக்கு சீன மொழியிலேயே பெயர் சூட்டப்பட்டுல்லதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று புறங்களில் சீன, பாகிஸ்தானிய ராணுவங்கள் தங்களது தடவாளங்களை சவாலாக காட்டி வரும் சூழலிலும் இந்தியா பொறுமை காக்கிறது. நமது அரசு பொறுமையாக இருக்கிறது என்றால், நம்மிடம் உள்ள உயரிய ராணுவ தளவாடங்களின் எண்ணிக்கையும், அதன் வீரியமும் எவ்வளவு அதிகமானதாக இருக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் சீன ராணுவத் தளவாடத்தை விட சற்றே சிறிதுதான் நம்முடையது.

உலகின் பலம் வாய்ந்த ராணுவத் தடவாளங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன. இந்தியா தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இன்று மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வந்து கண்காட்சி துவக்கவிழாவை தொடங்கி வைத்திருக்கிறார். அத்துடன் நமது ராணுவ தளவாடங்களையும் பார்வையிட்டார். அதன் புகைப்படங்களைதான் இந்த செய்தியில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மேலும் சில புகைப்படங்கள்: 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here