ரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..!

0
317

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தாறுமாறாக உருவாகி வரும் பேட்ட படத்தின் முதல் பாட்டு மரண மாஸ் நேற்று மாலை வெளியாகி யூடியூப் டிரென்டிங்-இல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் சன் பிக்சர்ஸ் இப்படம் குறித்துத் தொடர்ந்து அப்டேட்களை அள்ளி வீச திட்டமிட்டுள்ளது.

இதன் படி இன்று மாலை சன்பிக்சர்ஸ் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள நிலையில் இப்படத்தில் இவருடைய பர்ஸ்ட் லுக்-ஐ வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

பேட்ட படத்தில் விஜய் சேதுபதி பெயர் ஜித்து. போஸ்டர் பார்க்கும்போது சில்லவுட்டில் ரஜினி நடந்து வருவது போலும் ரஜினியை கொல்ல விஜய் சேதுபதி துப்பாக்கி உடன் காத்திருப்பது போல் உள்ளது.

சிம்டாங்காரன் பாடலை பலரும் விமர்சனம் செய்த நிலையில் மரண மாஸ் பாடலும் அதே மாதிரியாக இருக்கிறது என மக்கள் புலம்பி வருகின்றனர்.

இன்று காலை நிலவரத்தின் படி மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப்-இல் 2,57,00 பேர் லைக் செய்துள்ள நிலையில் 23,000 பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். சிம்டாங்காரன் பாடலின் லிரிக்கல் வீடியோவிற்கு 7,93,000 பேர் லைக்கும், 1,10,000 பேர் டிஸ்லைக்கும் செய்துள்ளனர்.

சிம்டாங்காரன் இதுவரை 34 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது, மரண மாஸ் பாடல் 3.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here