800 காளைகள்.. டிவி, பைக், கார் பரிசுகள்.. களைகட்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு..!

0
400

செவ்வாய்க்கிழமை உலகப் புகழ் பெற்ற அவனியாபுரஜல்லிக்கட்டுப் போட்டி எவ்விதமான விதிமீறல் , அசம்பாவித சம்பவங்கள் நேராமல் ஜல்லிக்கட்டுப் போட்டி அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் மற்றொரு புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்து வருகிறது.

இன்று காலை 8.15 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் 988 காளைகள் களமிறக்கப்பட்டன.

காளைகளை அடக்கச் சுமார் 855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 848 பேர் உடல் தகுதி சோதனையில் தேர்வாகி வாடிவாசல் முன் வீரத்துடன் களமிறங்கினர்.

காளையை விதிமுறைகளுக்கு உட்பட்டு அடுக்குபவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் முதல் கார் வரை பல பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் எல்இடி டிவி, ஆட்டுக்குட்டி, பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் போட்டியை பார்வையிடப் பல லட்சபேர் கூடிய நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காகச் சுமார் 500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இன்று பாலமேடு ஜல்லிக்கட்டும், நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here