மிரட்டிய ரசிகை… அதிர்ச்சியடைந்த ஓவியா!

0
1025
மிரட்டிய ரசிகை... அதிர்ச்சியடைந்த ஓவியா!

நேற்று ட்விட்டரில் நடிகை ஓவியா ரசிகர்களிடம் லைவ் சாட் செய்தார். தனது கொஞ்சு தமிழில் பேசியனார். நடிகை ஓவியா நேரடியாக ரசிகர்களுடன் ட்விட்டரில் நேற்று முதன் முதலாக பேசினார். ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் வீடியோ வடிவில் பதிலளித்தார். ஆயிரக்கணக்கில் கேள்விகள் வந்ததால் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே ஓவியா பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருத்தார் காதல் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓவியா நான் எப்போதும் காதலித்துக்கொண்டு தான் இருப்பேன், ஆனால் relationshipல் இல்லை என கூறியுள்ளார். இன்னொரு ரசிகை ஓவியா பல முறை ட்விட் செய்துள்ளார். அப்படி ஓவியாவின் பதிலுக்காக காத்திருந்த ரசிகை, நீங்கள் எனக்கு பதிலளிக்கவில்லை என்றால் உங்கள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொள்வேன் எனறு ட்விட்டினார். அதை பார்த்து அதிர்ச்சியான ஓவியா ஏன் இப்படி எல்லாம் ஷாக் கொடுக்குரீங்க, அப்படி சொல்லாதீங்க என பதிலளித்தார். கடைசியாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் உங்களின் பலரது கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை அதற்கு மன்னிக்கவும் என்றும், அடுத்த முறை அனைவரிடமும் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here