கர்ணனை மிஞ்சிய தமிழர்கள்: உடலுறுப்பு தானம் செய்வதில் தொடர்ந்து முன்னிலை!

0
1201

இறந்த ஒருவரின் உடல் உறுப்புகளை மற்றுவர்களுக்கு தானமாக வழங்கி அடுத்தவர்கள் வாழ்வு அளிப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமாக திகழ்கிறது என துணைக் குடியரசு தலைவர் பெருமிதம் அடைந்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை ஆணையமும், தனியார் மருத்துவமனை ஒன்றும் இணைந்து ஆயிரமாவது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியதற்கான கருத்தரங்கு சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடு பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் பல மொழிகள் இருந்தாலும் தாய்மொழியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது வளர்ச்சிக்கு உதவும் என்று குறிப்பிட்டார்.

உடல் தானம் பற்றி பேசிய அவர் உடலுறுப்பு தானத்தில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்வது பெருமையளிப்பதாகக் கூறினார். மேலும் பேசிய அவர் உடலுறுப்பு தானமே மரணத்துக்குப் பின்னும் வாழ்வதற்கான உன்னதமான வழி என்றார். உடல் உறுப்பு தானம் தேசிய இயக்கமாக மாற வேண்டும் என்றும் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பலர் தமிழகம் வருவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆரோக்கியமான வாழ்விற்கு முறையான உணவு, உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்! #MGR101

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here