விராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..!

0
5728

கிரிக்கெட் உலகில் மிகவும் சிறப்பான வீரர் என லிஸ்ட் எடுத்தால் நிச்சயம் தோனி முதல் 10 இடத்திற்குள் வருவார் என்பது மறுக்க முடியாத உண்மை. தோனியின் ஸ்மார்ட்டான முடிவுகள் இந்திய அணிக்கு பல வெற்றிகளையும் கோப்பையும் வாங்கிக் கொடுத்துள்ளது. எதையும் அலட்டிக்கொள்ளாத தோனி சுமார் 20க்கும் மேற்பட்ட உலகச் சாதனைகளைப் படைத்துள்ளார்.

5வது சர்வதேச போட்டியில் தனது சாதனை பட்டியலைத் துவங்கிய தோனி இந்திய அணிக்கு விளையாடத் துவங்கிய 2 வருடத்திலேயே மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கங்கூலி, சச்சின், டிராவிட், லட்சுமணன் என மிகப்பெரிய ஜாம்பவான்கள் அணியில் இருக்கும்போதே கிரிக்கெட் ரசிகர்களால் தனித்துக் கவனிக்கப்பட்டவர் தோனி. தற்போது இந்தியா மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாட்டிலும் இவரை மட்டும் தனித்துக் கவனிக்கத் துவங்க முக்கியக் காரணம் இவரது அதிரடி சாதனைகள் தான்.

தோனியின் சாதனை #1

உலகிலேயே ஐசிசியின் 3 முக்கியமான கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி தான்.

டி20 – 24 செப்டம்பர் 2007
உலகக் கோப்பை – 02 ஏப்ரல் 2011
சாம்பியனஸ் டிராபி – 23 ஜூன் 2013

தோனியின் சாதனை #2

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஸ்டெம்பிங்க்ஸ் செய்த விக்கட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி. இதுவரை சுமார் 178 ஸ்டெம்பிங்க்ஸ் செய்துள்ளார்.

தோனியின் சாதனை #3

சிக்ஸ் அடித்துப் போட்டியை வெல்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரர்க்கு மிகவும் சவாலான விஷயம். கடைசி நேரத்தில் குறைந்த பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் துணிந்து 6 அடிப்பது என்பது சாதாரணக் காரியம் இல்லை.

ஆனால் தோனிக்கு இது சர்வசாதாரணம். இதுவரை 9 முறையில் 6 மூலம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தோனியின் சாதனை #4

டி20 வரலாற்றில் எந்தொரு கேப்டனுமே செய்த ஒரு சாதனையைத் தோனி செய்துள்ளார். இதுவரை 150 டி20 போட்டிகளில் தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.

தோனியின் சாதனை #5

சர்வதேச கிரிக்கெட்-இல் அதிகச் சிக்ஸ் அடித்த கேப்டன் என்றால் இது நம்ம தல தான். இதுவரை 204 சிக்ஸ் அடித்துள்ளார் தோனி.

தோனியின் சாதனை #6

2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடிய பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. இதுவரை எந்தொரு விளையாட்டு வீரரின் பேட் இவ்வளவும் பெரிய தொகைக்கு ஏலம் போனது இல்லை.

தோனியின் சாதனை #7

கிரிக்கெட் போட்டிகளைத் தடம்புரட்டி போட்ட ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த கேப்டன் என்ற பெயரை தோனி பெற்றுள்ளார்.

தோனியின் சாதனை #8

தோனி தனது 66வது போட்டியில் தான் முதல் அரைச் சதத்தை அடித்தார்.

தோனியின் சாதனை #9

டி20 போட்டியில் அதிக டாஸ் வென்ற கேப்டன் என்ற முறையில் தோனி தான் உலகளவில் முதல் இடத்தில் உள்ளார்.

தோனியின் சாதனை #10

விக்கெட் கீப்பர் அதிகப் போட்டியில் பந்து வீசியுள்ளார் என்றால் தோனி தான் நம்பர் 1. இதுவபை 9 சர்வதேச போட்டியில் தோனி பந்து வீசியுள்ளார்.

தோனியின் சாதனை #11

டி20 போட்டியில் 5000 ரன் எடுத்த முதல் கேப்டன் தோனி.

தோனியின் சாதனை #12

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக முறை பேட்ஸ்மேனை ஸ்டெம்படு செய்ததும் தோனி தான். இதுவரை 33 பேட்ஸ்மேனை ஸ்டெம்பிடு செய்துள்ளார்.

தோனியின் சாதனை #13

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை அனைத்து போட்டிகளிலும் தோற்கடித்துச் சுமார் 140 வருட சாதனையைப் படித்தார் தோனி.

MS Dhoni

தோனியின் சாதனை #14

உலகக் கோப்பை டி20 போட்டிகளில் சுமார் 6 போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். இவரைத் தொடர்ந்து பால் கூலிங்வுட் மற்றும் டேரென் சமி ஆகியோர் உள்ளனர்.

தோனியின் சாதனை #15

ஐசிசி தர வரிசை பட்டியலில் மிகவும் குறைந்த காலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த வீரர்களில் தோனி முதல் இடம். வெறும் 42 போட்டிகளிலேயே தோனி முதல் இடத்தைப் பிடித்தார்.

MS Dhoni

தோனியின் சாதனை #16

கிரிக்கெட் வரலாற்றில் அதிகச் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் தோனி முதல் இடம். தோனி சுமார் 331 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

தோனியின் சாதனை #17

இதுவரை தோனி 78 போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இது எந்தொரு கிரிக்கெட் வீரரும் செய்தாத ஒன்று.

தோனியின் சாதனை #18

7வது இடத்தில் பேட்டிங் செய்தி அதிகச் சதம் அடித்த ஓரே கிரிக்கெட் வீரர் தோனி.

தோனியின் சாதனை #19

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த விக்கெட் கீப்பர்களில் தோனி முதல் இடம். இவரது அதிக ரன்கள் 183 நாட்அவுட்.

ராணுவ உடையில் பத்மபூஷண் விருதை பெற்றுக்கொண்டார் தோனி..!

தோனியின் சாதனை #20

உலகக் கோப்பை சிக்ஸ் அடித்து வென்ற ஓரே கேப்டன் தல தோனி தான்.

மேலே உள்ள எந்தச் சாதனை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம் ஆனால் இது நிச்சயம் முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here