நித்தியின் சிஷ்யைகள் இந்த 5 விஷயத்தை கத்துக்குவாங்களா?

0
3209

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள சிஷ்யைகள் வைரமுத்துவை திட்டியதில் துளியும் கூட நாகரீகம் இல்லை என மக்கள் கொதித்து போயிருக்கின்றனர். ஆன்மிகம் என்ற பெயரில் நித்தியானந்தா தனது பக்தாளுக்கு என்ன சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்? என்பதை உலகமே பார்த்துவிட்டது. வைரமுத்து தனது கட்டுரை குறித்து விரிவான விவரத்தை காணொளி மூலம் அளித்த பின்னரும், அவர் மீது குற்றமே இல்லை என அறிந்த பின்னரும் நித்தி ஆசிரமத்தில் இருந்து லைவ் வீடியோ கிளம்புகிறது. குறிப்பாக அதில் பேசிய பெண் குழந்தைகள், தகாத வார்த்தைகளால், மிகவும் கொச்சையான வார்த்தைகளால் வைரமுத்துவை பந்தாடினர். இப்போதுதான் பதின் வயதை அடைந்த பிள்ளைகள் அவர்கள்.

#1 வாழ்க்கையில் கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ளன. நல்ல விடயங்களை கற்றுக்கொள்ள ஆன்மீக மடங்களை விட எத்தனையோ நூலகங்கள், சிந்தனை வட்டங்கள் உள்ளன. ஒரு நூல் நூறு ஆசிரியர்களுக்குச் சமம் என்பார்கள். இந்த வளங்களை அந்த பிள்ளைகள் பயன்படுத்தியிருந்தால் இது போல பேசியிருக்க மாட்டார்கள். ஆன்மீகத்தை கற்பதாக எண்ணி, ஒரு தவறான வழிகாட்டுதலில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

#2 தவறான போக்கும், தகாத சேர்க்கையும் ஒரு குழந்தையை எப்படி சமூக விரோதியாக மாற்றும் என்பதை நித்தியின் சிஷ்யைகள் நிரூபித்துள்ளனர். நித்யானந்தா மீதான சர்ச்சைகள் நிலுவையில் உள்ள நிலையில், எப்படி பெற்றோர்கள் அந்த குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. துறவறம் பூண்ட குழந்தைகள் இப்படி பேசுவதைக் கண்டு அவர்களின் பெற்றோர்கள் வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

#3 ‘வீர இந்து தமிழச்சி’ என அக்குழந்தைகள் பயன்படுதுக்கின்றன. இதன் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் உணர்ந்துதான் பேசுகிறார்களா? அதே போல ‘தமிழ் என்பது மொழி இல்லை, மதம்’ என பேசுகிறார்கள். பல்லாயிரம் நூற்றாண்டுகள் கடந்து வந்த தமிழ் மொழிக்கே இது இழுக்கு. தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் மதச்சாயம் பூசுவதற்கு நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை கொஞ்சம் கூட உணர்ந்திருக்கவில்லை இந்த குழந்தைககள்.

#4 இந்து சனாதன தர்மம் என வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார்கள். உண்மையைச் சொன்னால் இந்து சனாதன தர்மம் பெண்களை இப்படி பேசவே அனுமதிக்கவில்லை. சனாதன நெறியை தாண்டி நாம் பேசுகிறோமே என கூட இக்குழந்தைகள் உணர்ந்திருக்கவில்லை, பாவம்.

#5 ஆண்டாள் தமிழை ஆண்டாள். வடமொழி எழுத்துக்களை தமிழில் கலக்க அனுமதிக்காமல் அதற்கேற்ற எழுத்து உருவங்களை தமிழிலேயே உருவாக்கி பாசுரங்களை படைத்த ஆழ்வார்களில் கலந்திருந்தார் ஆண்டாள். ஆணாதிக்க சமூகத்தின் அடியில் இருந்து ஒலித்த முதல் பெண் குரல் ஆண்டாளுடையது. கொஞ்சம் கூட வரலாறே தெரியாமல், இக்குழந்தைகள் கதறுவது பாவமாக இருக்கிறது.

இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் களத்தில் உள்ள உண்மையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை மீட்டு சராசரியான மனித வாழ்வியல் முறைகளில் வாழ விட வேண்டும். ஆசிரமத்தில் ஒரு குழந்தைக்கு இளவரசி என பட்டம் சூட்டி வளர்க்கிறார்கள். தெய்வ அலங்காரங்களை செய்து ஒரு கற்பனையான உலகத்தில் உலவ விட்டு உண்மையான வாழ்வியலை இக்குழந்தைகளின் கண்களில் இருந்து மறைக்கிறார்கள் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே இக்குழந்தைகளுடைய மனநிலை சீர்திருத்தப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here