ஜியோவின் புதிய திட்டம்.. முகேஷ் அம்பானி-யின் மாஸ்டர் பிளான்..!

0
792

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் நிறுவனமான ஜியோ, தற்போது டெலிகாம் மட்டும் அல்லாது பிற சேவைகளிலும் இறங்கியுள்ளது குறிப்பாகப் பிராண்ட்பேன்ட் சேவை, பேமெண்ட்ஸ் வங்கி, ரீடைல் வர்த்தகம். இந்த வரிசையில் தற்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ புதிய வர்த்தகச் சந்தைக்குள் நுழைய உள்ளது.

சுமார் 2 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோ தற்போது வியாபாரிகள் மத்தியில் நுழைய திட்டமிட்டுள்ளது. ஆம் அனைத்து விற்பனையங்களிலும் இருக்கும் பாயின்ட் ஆப் சேல் என்கிற ஸ்வைபிங் மெஷின் சந்தையில் ஜியோ நுழைய திட்டமிட்டுள்ளது.

pos

தற்போது வெளியாகியுள்ள செய்திகளும், தகவல்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜியோவின் பிஓஎஸ் சேவை மும்பை, பெங்களூரு, ஹைதரபாத், சென்னை, பூனே மற்றும் கொல்கத்தா ஆகிய நாட்டின் 6 முக்கியமான நகரங்களில் இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.

வெறும் 3000 ரூபாய் கொடுத்து ரிலையன்ஸ் பிஓஎஸ் இயந்திரத்தை வாங்கினால் போது, 2000 ரூபாய் வரையிலான அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இந்தச் சேவைக்காக வியாபாரிகள் தற்போது வங்கிகளுக்குச் செலுத்தி வருகின்றனர். ஜியோ இந்தச் சேவையை இலவசமாக வழங்குகிறது.

Reliance Jio GigaFiber price details: August 15 launch - SparkTV Tamil வெறும் ரூ.500க்கு 100GB அதிகவேக இண்டர்நெட்.. ஜியோ அதிரடி அறிவிப்பு..!

தற்போதைய நிலையில் இந்தப் பிஓஎஸ் இயந்திரம் ஜியோ மணி மற்றும் BHIM ஆகிய சேவைகளை ஏற்றுப் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். விரைவில் பிற வேலெட் சேவைகளும் இதில் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படும்.

மேலும் ஜியோ இந்தச் சேவைக்காக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் இந்த வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வங்கிகள் மட்டும் அல்லாது தனியார் நிறுவனங்களான MSwipe, Ezetap, Pine Labs, Innoviti மற்றும் PhonePe ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here