ஹெச்1பி விசா பெறுவதில் கூடுதல் பிரச்சனை.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

0
327

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஏற்கனவே ஹெச்1பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தற்போது கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்த திட்டமிட்டுள்ளது. இன்று டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து அமெரிக்க நிறுவனங்களும், எத்தனை வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்ற முழுமையான தகவல்கள் வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தத்தம் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்1பி விசா அளிக்க ஸ்பான்ஸர்-ஐ குறைக்கத் திட்டமிட்டு வருகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு விசா தான் இந்த ஹெச்1பி விசா, இதைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் காரணத்தால் இந்தியாவில் மக்களுக்கு அமெரிக்காவில் பணியாற்ற கிடைக்கும் வாய்ப்புகள் அதிகளவில் குறையும்.

இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும் அதிகளவிலான வருமான மற்றும் வர்த்தகத்தையும் பாதிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here