டிராய் உத்தரவால் பணம் மிச்சம்.. மக்கள் மகிழ்ச்சி..!

0
428

டெலிகாம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமலாக்கம் செய்ய உள்ள புதிய MRP திட்டத்தின் மூலம் மக்கள் கேபிள் டிவிக்காகச் செலுத்தும் கட்டணம் அதிகளவில் குறையும் என டிராய் அமைப்பின் தலைவர் ஆர்எஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

இப்புதிய திட்டம் மற்றும் கட்டண முறை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு ஏதுவான முறையில், குறைந்த கட்டணத்தில், மிகவும் வெளிப்படைத் தன்மை நிறைந்து காணப்படும் அளவிற்குத் திட்டம் வகுக்கப்படுகிறது.

தற்போது கேபிள் டிவிக்காக நகரங்களில் சுமார் 300 முதல் 500 ரூபாய் வரையில் செலுத்தி வருகிறோம், இதுவே கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் கட்டணம் சற்று குறைவாக உள்ளது.

இந்தக் கட்டணத்தில் சுமார் 200 முதல் 250 சேனல்கள் வரையில் வருகிறது, ஆனால் அதிகப்படியாகப் பார்க்கப்படும் சேனல்களின் எண்ணிக்கை என்னவோ 50 மட்டும் தான். இந்நிலையில் இப்புதிய கட்டண முறையில் மக்களுக்குத் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களுக்கு மட்டும் கட்டணத்தைச் செலுத்தி அதை மட்டும் பார்க்க முடியும்.

இதனால் சிறு குறு சேனல்கள் கடுமையான வர்த்தகப் பாதிப்பை சந்திக்கும், ஆனால் முன்னணி சேனல்கள் அனைத்தும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தில் சிறு சேனல்கள் மூடப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இப்புதிய திட்டத்தில் 25 தூர்தர்ஷன் சேனல்களும், பலதரப்பட்ட தனியார் சேனல்களும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது, இதனால் மக்கள் செலுத்தும் குறிப்பிட்ட சேனல்களுக்கான கட்டணத்துடன் இலவசமாகக் கிட்டத்தட்ட 100 சேனல்கள் இலவசமாகப் பார்க்க முடியும்.

மேலும் இத்திட்டத்தில் அடிப்படை கட்டணமாக 130 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி பிடித்தமான சேனல்களுக்குக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு டிசிஹெச் நிறுவனம் 100 ரூபாய்க்கு அனைத்து சேனல்களையும் இலவசம் என அறிவித்தால் என்னாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here