அடுத்தடுத்த பெரிய படங்கள்.. தமிழ் சினிமாவின் புதிய லேடி சூப்பர்ஸ்டார்..!

0
674

தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று மெட்ராஸ் கபே. இப்படத்தின் ஹீரோயினாக அறிமுக நாயகி ராஷி கண்ணா தற்போது தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தட்டிசென்று வருகிறார்.

சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்த தொலிப்பேரேமா படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகியுள்ளார். இவரின் சினிமா பயணம் ஹிந்தியில் துவங்கியிருந்தாலும், தெலுங்கில் அதிகளவிலான படங்களை நடித்து வந்தார், நடுவில் மலையாளத்தில் வில்லன் என்ற படமும் நடித்தார்.

இந்நிலையில் தான் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் துவங்கினார். இதன் பின் சில மாதங்களில் ஜெயம் ரவியின் அடங்க மறு படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இதுமட்டும் அல்லாமல் புரட்சி தளபதி, புது மாப்பிள்ளை விஷால் உடன் அயோக்கியா என்னும் படத்தில் நடித்து வரும் நிலையில், சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் சைதான் கா பச்சா படத்தில் ஹிரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார், மறுபுறம் தமிழிவ் விஜய் சேதுபதி புதிதாக நடிக்க ஒப்பந்தமாகியள்ள விஜய் சந்தர் படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படி கையில் சுமார் 4 படங்களை வைத்துள்ளார் இவர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here