அடேய் அநியாயம் பண்ணாதீங்கடா.. இதெல்லாம் பேஷனா?

0
674

ஆடை ஒவ்வொரு காலத்திலும் மக்களின் விருப்பத்திற்கு இணங்க பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால் கடந்த 10 முதல் 15 வருடத்தில் பேஷன் உலகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையாகாது.

இதேவேளையில் சில விசித்திரமான ஆடைகளும் சந்தைக்கு வந்தது, வருகிறது, இனியும் வரும். ஆனால் இப்போது சந்தைக்கு வந்துள்ள இன்வெர்டடெட் ஜீன்ஸ் சமுக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

சீ டெனிம் என்னும் ஆடை நிறுவனம் இன்வெர்டட் ஜீன்ஸ் என்னும் புதிய வகை ஜீன்ஸை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஜீன்ஸை பார்த்தால் நமக்கு முதலில் தோன்றுவது இதைக் கீழ் இருந்து மேல் அணிவதா, அல்லது மேல் இருந்து கீழ் அணிவதா என்பது தான். பேஷன் பேஷன் என்று தற்போது நாட்டு நாசமா போய்கிட்டு இருக்குன்னு பேசும் வாய்களுக்கு அவல் பொரி கொடுத்தது போல் உள்ளது இந்த ஜீன்ஸ்

சீ டெனிம் நிறுவனம் இரண்டு வகை ஜீன்ஸை அறிமுகம் செய்துள்ளது, ஒன்று ஷார்ட்ஸ் மற்றொன்று இயல்பான ஜீன்ஸ் பேன்ட். இந்த டிசைன் கூடப் பொறுத்துக்கலாம் ஆனால் விலையைக் கேட்டால் டென்ஷன் ஆகிறது..

இந்த ஜீன்ஸின் துவக்க விலையே 23,000 ரூபாயாம், அதிகப்படியான விலை 30,000 ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here