இனி மழை பெய்தால் ஸ்கூல் லீவ் இல்லை.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவும்..!

0
722

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநிலங்களின் கலெக்டர்கள் அனைவரும் மழை மற்றும் உள்ளூர் திருவிழா போன்ற நிகழ்வுகளுக்காக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறையைச் சனிக்கிழமை பள்ளி நடத்துவதன் மூலம் விடுமுறைகளை ஈடுசெய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

மாநில கலெக்டர்கள் பள்ளிகளின் திட்டங்கள், மாணவர்களின் படிப்புக் காலம் ஆகியவற்றைக் கவனிக்காமல் மழை மற்றும் திருவிழா காரணங்களுக்காக அடிக்கடி விடுமுறை அளிக்கின்றனர்.

இதனைக் கவனித்த தமிழக அரசு இப்பிரச்சனையைச் சரி செய்யத் தற்போது விடுமுறை நாட்களைச் சனிக்கிழமை பள்ளி வைத்து ஈடுசெய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவசர காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டுமெனில் பள்ளி திறக்கும் 3 மணிநேரத்திற்கு முன்பு எடுத்தால் கூடப் போதுமானது என்றும் அப்படி அளிக்கப்படும் விடுமுறையானது தத்தம் பகுதிகளுக்கும் மட்டுமாக இருக்க வேண்டும் மொத்த மாவட்டத்திற்கும் அறிவிக்கக் கூடாது எனப் பள்ளி கல்வி செயலாளர் பரதீப் யாதவ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here