அந்த மாதிரி வெப்சைட்டிற்கு சென்றால் இனி பாட்டு பாடி காட்டி கொடுத்துவிடும்!

0
692

இன்றை உலகில் இணையதளம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது அதிக அளவு இணைய பளன்பாடு அதிகரித்த்து கொண்டே தான் செல்கிறது. இந்த இணைய தளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அதிதியாவசிமான ஒன்றாகிவிட்டது. இணைய தேடலின் போது இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஆபாச பட தளத்திற்கு செல்கின்றனர் புள்ளி விவரங்களில் சொல்லப்படுகின்றன. இதனால் அந்த தளங்களுக்கு அடிமையாகி விடும் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். போர்னோகிராபி வெப்சைட்டுகளை இளைஞர்கள் அதிக அளவில் நாடுவது வாரனாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் டாக்டர் விஜய் நாத் மிஸ்ராவிற்கு இதை தடுப்பதற்கான ஒரு யோசகை கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நியூராலஜி பேராசிரியரான அவர் பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். ‘ஹர ஹர மகாதேவ்’ என்ற அந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது, இது போர்னோ சைட்டுகளை பிளாக் செய்வதோது, அந்த மாதிரியான சைட்டுகளை திறந்தாலே பஜனைப் பாடல்களும் ஒலிக்கும் படியும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செயலியில் ஹர ஹர மகாதேவனின் பாடல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் காயத்ரி மந்திரம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரின் எழுச்சியான உரையாடல்களையும் ஒலிக்கச் செய்ய இந்தக் குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இது மதவாத சிந்தனையோடு உருவாக்கப்பட்ட செயலியல்ல என்றும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் இது போன்ற இணையதளங்களை திறந்தால் ‘அல்லாஹ் அக்பர்’ என்று ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பபட உள்ளதாகவும் கூறினார். இளைஞர்கள் போர்னோகிராபிக்கு அடிமையாவதில் இருந்து தடுப்பது ஒன்றே இந்த செயலியின் நோக்கம் என்பது பேராசிரியர் விஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.இதற்கு ஹர ஹர மகாதேவ என்று பெயரிடப்பட்டுள்ளதற்கான காரணத்தையும் பேராசிரியர் விளக்கியுள்ளார். சிவன் தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்தவர் என்ற நோக்கிலேயே செயலிக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிலை டெஸ்க்டாப் மற்றும் மொபைல் இரண்டிலுமே பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here