நீட் தேர்வுக்கும் மாநிலத் தேர்வுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்!

0
6842
தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் ஒருவழியாக நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இரண்டு அப்பாவி மாணவர்களின் தந்தைகள் மன உளைச்சல் மற்றும் திடீர் அலைச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நீட் ஒரு தேர்வாக இருப்பதை விட உயிர்பலி எடுக்கும் அரக்கனாகவே தமிழக மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மாநிலத்திற்குள் நுழைவதை விட அது கொண்டிருக்கும் விதிமுறைகள்தான் மாணவர்களை, மாணவிகளை மிரட்டுகிறது. அவை விதிமுறைகளா அல்லது வன்கொடுமைகளா என்று வித்தியாசம் அறிய முடியாத அளவுக்கு மிகவும் கொடுமையானதாக இருப்பதாகத்தான் அறிய முடிகிறது. 
 
நமது மாநிலத்திலும் அரசுத் தேர்வுகள் நடக்கின்றன. அதில் பல லட்சம் மாணவ மாணவிகள் வருடா வருடம் தேர்வு மகிழ்ச்சியுடன் எழுதுகின்றனர். ஆனால் நீட் மட்டும் ஏன் மாணாக்கர்களை மிரட்டுகிறது என்ற கேள்விக்கு, அதன் விதிமுறை சிக்கல்கள் மட்டுமே பதிலாக கிடைக்கிறது. 
 
நமது மாநிலத் தேர்வுகளுக்கும், நீட் தேர்வுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இங்கே பார்க்கலாம் வாருங்கள். 
 
 
1. நீட் தேர்வு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கும். மாணவர்கள் 9:30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். நமது மாநிலத் தேர்வான டி.என்.பி.எஸ்.இ தேர்வுக்கும் இதே போன்ற கால அட்டவணை உள்ளது. 
2. நீட் தேர்வு மையத்தில் வரிசையாக காவலர்கள் நிறுத்தப்பட்டு, மாணவ மாணவிகளை முரட்டுத் தனமாக சோதனை செய்வார்கள். டி.என்.பி.எஸ்.இ தேர்வு மையங்களில் அடாவடி சோதனை நடைபெறாது. காவலர் படை நிறுத்தப்பட்டிருக்காது. 
 
3. நீட் மையத்திற்குள் செல்லும் மாணவிகளின் கூந்தலை அவிழ்த்து சோதனை செய்யப்படும். ஆடைகளில் அவர்களுக்கு தேவையற்ற பகுதிகளாக படும் பகுதிகள் வெட்டப்படும். உள்ளாடைகளை கூட அகற்றச் சொல்வார்கள். டி.என்.பி.எஸ்.இ தேர்வு மையங்களில் முழு ஆடை சுதந்திரம் உண்டு. மாணவிகள் எவ்வித கடுமையான சோதனைக்கும் உள்ளாகாமல் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதச் செல்கிறார்கள். 
 
4. நீட் எழுதச் செல்லும் மாணவிகள் மூக்குத்தி, தோடுகள், வளையல், நகைகள் எதுவும் அணிந்திருக்கக் கூடாது. அணிந்திருந்தால் தேர்வு மையத்திற்கு வெளியிலேயே நிற்கவைத்து ஆபரணங்களை பிடுங்கி விடுவார்கள். 
 
டி.என்.பி.எஸ்.இ தேர்வு மையங்களில் திருமணம் முடிந்த கையோடு, நகைகள் மின்ன, புதுத் தாலி கழுத்தில் தழைக்க தழைக்க வந்து தேர்வு எழுதுவார்கள் எத்தனயோ பெண்கள். சில நேரங்களில் புதுமண தம்பதிகளே வந்து தேர்வு எழுதுவார்கள். 
 
5. நீட் தேர்வு என்றாலும், டி.என்.பி.எஸ்.இ தேர்வு என்றாலும் இரண்டிலுமே கால்குலேட்டர், செல் போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாது. இது தேர்வு முறைகளுக்கான பொதுவான விதி ஆகும். 
 
மாணவ மாணவியர்களை சோதனை என்ற பெயரில் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நீட் எங்கே? 
மாணவ மணிகளால் திருவிழா போல கொண்டாடப்படும்  டி.என்.பி.எஸ்.இ. தேர்வு எங்கே? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here