“பில்ட்ங்க் ஸ்ட்ராங்க்- பேஸ்மென்ட் வீக்”- இந்த கதை உங்களுக்கு தெரியுமா?

0
1308

1. 17 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டீருந்தீர்கள் ?

இந்த கட்டுரையை வாசிக்கத் தொடங்கியிருக்கும் நீங்கள் 17 வயதில் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்? பரிட்சை எழுதி ரிசட்டுக்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம் என நாளிதழ்களில் தேடிக் கொண்டிருந்தீர்ப்பார்கள்.
உங்களுக்கு மருத்துவம் கனவாக இருந்தால், மிகவும் தீவிரமாக  நுழைவுத் தேர்பிற்கு படித்துக் கொண்டிருப்பீர்கள். கவனிக்க. தேர்வுக்கு மட்டும் படித்துக் கொண்டிருப்பீர்கள்.
மருத்துவப் படிப்பு என்ற கனவிற்காக மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்கும்போது உற்சாகத்துடனும் லேசான படபடப்படுனே இருந்திருப்பீர்கள்.வேறெந்த கவலையும் அந்த வயதில் உங்களுக்கு உண்டாகியிருக்க வாய்ப்பிருக்காது.

2. முடியுமா ? முடியாதா?

அப்படித்தான் இன்றைய 17 வயது மாணவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?  நம்மால படித்து தேர்வில் வெற்றி பெற முடியுமா என்ற காலம் போய், நம்மை நுழைவுத் தேர்வு எழுத இந்த அரசு வழிவிடுமா என்ற நிலை எப்படியான துர்பாக்கியம். இது ஆளும் அரசிற்கு எப்படியான அவமானம்
அந்த பிஞ்சுகள் தங்களுக்கான பாதையை அவர்கள் தீர்மானித்து காலை எடுத்து முதல் அடி வைக்கும்போது எட்டி உதைக்கிறது இந்த நீட் என்கின்ற பூதம்..  தங்கள் பாதையை நோக்கி போவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கும் போதே, வாசலிலேயே நீட் என்னும் கொடுங்கோல் பந்தக் கால் வைத்து அமர்ந்து கொண்டிருக்கிறது.

3. உன் குத்தமா? என் குத்தமா?

நீட்என்ற தேசிய நுழைவுத் தேர்வு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான தேர்வு. இதன் மூலம் மிகத் தகுதிப் பெற்ற மாணவர்களே தேர்வாவார்கள் என்பதெல்லாம் சரிதான். மக்களாகிய நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தேசிய அளவில் ஒரு பரிட்சை நடக்க வேண்டுமென்றால், தேசிய அளவில்தானே பள்ளிப் படிப்பின் தரமும் இருக்க வேண்டும். ஏன் இந்தியாவில் பள்ளித் திட்டங்களை தேசியமயமாக்கவில்லை.? தனியார் பள்ளிகளை விட்டுத் தள்ளுங்கள்..
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவனுக்கு மருத்துவம் என்ற கனவு இருக்கவே கூடாதா? ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதுதான் ஓர் அரசின் கொள்கையா?
அரசுப் பள்ளிகளில் இதுவரை அரசு செய்ததென்ன? நல்ல கழிப்பறை, நல்ல பாடத் திட்டம்?  குறைந்த பட்சம் நல்ல கழிப்பறை கட்டிக் கொடுக்க முடியவில்லை. நல்ல தரமான படிப்பை தரவில்லை அதனால்தான் நீட் என்ற தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்பது ஊரறிந்த விஷயம். அப்படியென்றால் அரசினால் வடிவமைக்கப்பட்ட பள்ளிகள் தரமில்லையென்றால்,அரசும் தரமானதில்லை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

4. இன்னும் என்னல்லாம் செய்வீங்க பாஸ்?

சரி ஒழியட்டும் .திணறி, படித்து எப்படியாவது நீட் எழுதுகிறோம் என கனவை விடாமல் பற்றிக் கொண்டு வருபவர்களின் கடைசி நிமிடங்களில் அவர்களுக்கு தரும் ஒரு பிரச்சனைகள் இருக்கிறதே… 30 வயதில் அனுபவிக்க வேண்டிய மனஅழுத்தங்களை 17 வயதில் அவர்களுக்கு கொடுத்து இந்த அரசு வேடிக்கைப் பார்க்கிறது. இது நியாயமா?
தமிழ் நாட்டுக்கும் ராஜஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் நாட்டில் கிடைக்காத இடமா எங்கோ இருக்கும் எர்ணாகுளத்திலும் தெலுங்கானாவிலும் கிடைக்கும்? இறுதி நாட்களில் அவர்களுக்கு பேருந்து கிடைக்குமா, கிடைக்காதா, அவர்கள் தங்க என்ன செய்வார்கள் என கொஞ்சமும் தயவு சாட்சண்யம் பார்க்காத ஒரு அரசு எப்படி ஒரு நல்ல ஆட்சியாக இருக்க முடியும்?.
சரி அங்கே இறுதி சமயத்தில் போக வேண்டும் என்றால் அந்த மாநில அரசு என்ன செய்திருக்கலாம்? உடனடியாக அவர்களுக்கு தனிப் பேருந்து அமைத்து அவர்களை பாதுகாப்பாக கொண்டு போய் வரும் ஏற்பாடாவது செய்திருக்கலாம்? ஏன் செய்யவில்லை? ஐ.பி.எல் விளையாட்டிற்கு விமான பாதுகாப்பு வழங்கப்படும் அளவிற்கு, இந்த அரசு, எளிய மக்களின் வாழ்க்கைப் பற்றி சிறிதும் அக்கறைபடவில்லையே.

5. மூக்குத்தியை கழட்ட சொல்பவர்களின் மூளை எங்கே?

கோடிக்கணக்கான பண மூட்டைகளில் பதுக்கியிருக்கும் முதலைகளை பிடிக்க நமக்கு திறமையில்லை. அவர்களை வெளி நாடு தப்பும் வரை டாட்டா சொல்லி வழியனுப்பத் தெரியும் சிபிசிஐடிக்கு, 17 வயது குழந்தை மூக்குத்தியில்தான் ‘பிட்’ வைத்து காபி அடிக்கும் என்ற அளவில்தான் அவர்களின் அறிவுக் கூர்மை இருக்கும் என நாம் நினைத்துக் கொள்வோமாக.
பல வருடங்களுக்கு முன் அரசுப் பள்ளியில் படித்து, மெரிட்டில் மருத்துவப் படிப்பு படித்து இன்று தலை சிறந்த மருத்துவர்கள் பல ஏழை மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அதெல்லாம்  உனக்கெதுக்கு. எது முடியுமோ அது மட்டும் படி என்று சொல்லும் அரசு எங்களுக்கு தேவையில்லை. மக்களுக்காக மக்களுக்காய் அமைக்கப்பட்டுதான் அரசாங்கம் என்பது எங்களுக்கு மறந்து போய்விட்டது.

6. என்ன செய்ய வேண்டும் இந்த அரசு?

ஏன் மக்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? அரசு கல்லூரி, அரசு வேலை என முன்னுரிமை தருபவர்கள் ஏன் அரசுப் பள்ளிகளிய விரும்புவதில்லை தெரியுமா? ஏன் அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக இருப்பவர்களே கூட தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை.
 ஒரே காரணம் நல்ல தரமான கல்வி மற்றும் பயிற்சிகள் இல்லையென்பதால் மட்டுமே.  அரசு அதிகாரிகள்,  மற்றும் ஆளும் கட்சியினர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என சட்டம் இயற்றிப் பாருங்கள். பின் தெரியும் அரசுப் பள்ளியின் தகுதி எப்படி உயருமென்று. இதனால் சம அளவில் எல்லாரும் ஒரே மாதிரியான படிப்பு கிடைக்கும்போது, தகுதியிருக்கும் மாணவன் வெற்றி பெறுவான்.
அதையெல்லாம் செய்யாமல், அஸ்திவாரத்தை மிக பலவீனமாக்கப்பட்டு, கட்டிடத்தை செப்பனிடும் பணிதான் உங்கள் நீட் என்னும் தேர்வு.ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் நாம் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here