அமெரிக்காவில் ஜாலியாகச் சுற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்..!

0
512

பல வருடங்களுக்குத் தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாரா மூலம் இப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சன் பிக்சர்ஸ் – ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்துடன் பொங்கல் பண்டியன்று களமிறங்கிய விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

இந்த வெற்றியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றால் மிகையில்லை. இதோடு நயன்தாராவின் ஐரா படத்தின் டீசர் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வெற்றியை கொண்டாட தனது பாய் பிரென்டான இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்தச் சுற்றுலாவின் புகைப்படங்கள், வீடியோவை விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம்-இல் பதிவிட்டுள்ளார், இது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here