குழந்தைகளை புஷ்டியாக்கும் சத்து மாவு புட்டு ரெசிபி!!

0
2679

நவ ராத்திரி அன்று சுவையான மாலை வேளை விதவிதமாக செய்யவும் அதே சமயம் குழ்னதைகளுக்கு ஊட்டம் தரும் விதமாகவும் இருந்தால் நல்லா இருக்கும்ல. எப்பவாவது விசேஷ தினங்களில் குழ்னதைகள் ஹெல்தியான பலகாரங்கள் சாப்பிட்டால்தான் உண்டு. இல்லையென்றால் மற்ற தினங்களில் பலருக்கும் செய்ய நேரம் இருப்பதில்லை.

பூஜைக்கு என்று பட்சணங்கள் செய்யும் போது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல சுவையாகவும் அதே சமயம் ஹெல்தியகவும் இருக்கும் சில பலகாரங்கள் செய்யலாம்.  நவராத்திரிக்காகவும் செய்தாயிற்று. அதே சமயம் குழந்தைகளுக்கான ஹெல்தி ஸ்நேக்ஸும் தயார்.

அவ்வாறு இரு ரெசிப்பிகளை இங்கு காணலாம். நவராத்திரி ஸ்பெஷலாக நம் ஸ்பார்க் டிவி இந்த ரெசிப்பிகளை வழகுகிறது. செய்து குழந்தைகளுக்கு கொடுத்து இந்த நவ ராத்திரியை மேலும் கலர்ஃபுல்லாக்கி மகிழுங்கள்.

சத்து மாவு புட்டு :

சத்து மாவு புட்டு அதிக புரதம் கொண்டது. குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் அவசியமானது. இந்த நவராத்திரி மாலைக்காக எப்படி தயாரிக்கலாம் எனப் பார்க்கலாம்

தேவையானவை:

நவ தானிய பொடி – ஒரு கப்,
தேங்காய் துருவல் – கால் கப்

சர்க்கரை – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

முதலில் நவ தானியங்களை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய வாய் அகலமான பாத்திரத்தில் அரைத்து மாவை போட்டு, அதில் உப்பு, நெய் விட்டு பிசைந்து, அவ்வப்போது சிறிதளவு நீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக விடுங்கள்.

மாவு வெந்ததும், அதனை உதிரி உதிராயாக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் என மீதி உள்ள பொருட்களை எல்லாம் கலந்து கொள்ளுங்கள். உடலுக்கு சத்தான அதே சமயம் சுவையான புட்டு ரெடி!

வேர்க்கடலை, காய் சுண்டல் :

வேர்க் கடலை மற்றும் பலவித பழம் மற்றும் காய்களை போட்டு செய்யப்படும் இந்த சுண்டல் மற்ற சுண்டல் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானது. சுவையும் நன்றாக் இருக்கும். சத்து நிறைந்தது.

தேவையானவை:

வேர்க்கடலை – ஒரு கப்,
ஆப்பிள்- ஒன்று
மாங்காய் – ஒன்று,
கேரட்- ஒன்று
கறிவேப்பிலை – சிறிது
உளுத்தம் பருப்பு- தாளிக்க
கடுகு- தாளிக்க

பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – கால் கப்,
எண்ணெய்- சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். கேரட், ஆப்பிள், மாங்காயை தோல் சீவி துருவ வேண்டும். மிளகாயை பொடியாக நருக்கிக் கொள்ளுங்கள். ஒரு வாணிலியில் எண்ணெயை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் துருவிய பழம் மற்றும் காய்களை போட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின், வேக வைத்த வேர்க் கடலையை போட்டு தேவையான உப்பையு போட்டு வதக்குங்கள். இறுதியில் தேங்காயை துருவி சுண்டலில் சேர்த்து இறக்குங்கள். வேர்க் கடலை காய் சுண்டல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here