மாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க!

0
924

ஒரு பெண்ணிற்கு சரியாக 28-30 நாட்கள் சுழற்சியில் மாதவிடாய் ஏற்பட்டால் ஆரோக்கியான உடல் பெற்றிருக்கிறாள் என்பதன் நல்ல அறிகுறி.

ஆனால் சரியான சுழற்சியில் மாதவிடய ஏற்பட்டாலும் மட்டுமல்ல, ரத்தப் போக்கும் கண்காணிப்பது அவசியம். 6 நாட்கள் வரை ரத்தப் போக்கு இருந்தால் அது இயல்பானது. ஆனால் சிலருக்கு 7 முதல் 10 நாட்கள் வரை இன்னும் சிலருக்கு 20 நாட்கள் கூட இருக்கும். அவ்வாறு இருந்தால் அது ஆரோக்கியமானது அல்ல. இது ஆரோக்கியமற்ற போக்காகும்.

இவ்வாறு அதிக ரத்தப் போக்கு இருந்தால் உடலில் அதிக சோர்வு உண்டாகும். ரத்த சோகை ஏற்படும். வயிற்று வலி, தலை வலி முதல் இன்ன பிற தொல்லைகளால் அவதிப் பட நேரிடும்.

அதிக ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரை நாடி தகுந்த பரிசோதனைகள் செய்ய வேண்டியது அவசியம். எல்லாம் நார்மலாக இருந்தால் பிரச்சனை இல்லை. வீட்டிலேயே தகுந்த இயற்கை வைத்திய முறைகளைக் கொண்டு குணப்படுத்தலாம்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கசாயமாக குடித்தால்,மாதவிடாயின் போது உண்டாகும் அதிக ரத்தப் போக்கு குணமாகும். மேலும் ஹார்மோன் சீராக செயல்படும்.

மாதுளை தோல் :

மாதுளை பழத் தோலை சிறிது எடுத்து மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து லேசாக புளித்த மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது வரும் அதிக ரத்தப் போக்கு கட்டுப்படும்.

தும்பை வைத்தியம் :

தும்பை இலை
நல்லெண்ணெய்
எலுமிச்சை – 1

தும்பை இலைச் சாறு எடுத்து 15 மி.லி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 10.மி.லி அளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை மாதவிடாயின் போது குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குறைந்து உடல் மற்றும் கருப்பை வலு அடையும்.

உணவு :

அதிக ரத்தப் போக்கு இருப்பதால் உண்டாகும் ரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைப்பாடை தவிர்க்க இரும்புச் சத்து அதிகம் உள்ளமுருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, ,பசலைக் கீரை, சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனல உடல் சோர்வை தடுக்கமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here