கண்களுக்கு அடியில் சதைப்பை இருக்கா? தினமும்1 நிமிஷம் இப்படி செய்ங்க!!

0
57

வயதாவது முதலில் தெரிய வருவது கண்கள்மூலம்தான். உடல் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் உங்கள் கண்களைப் பார்த்து உங்களுக்கு வயதாகிவிட்டதை கண்டுபிடித்திடலாம்.

வயதாக ஆக கண்கள் சோர்ந்து போகும். கண்களுக்கு அடியில் நீர் தேங்கி உப்பி காணப்படும். சிலருக்கு பள்ளம் மற்றும் கருவளையம் உண்டாகும்.

வயது ஏற ஏற ரத்த ஓட்டம் குறைவாகும். இதனல இறந்த செல்கள் உடலிலேயே தங்கப் பெற்று சருமம் தடிமனாகும். சுருக்கங்கள் உருவாகும். அப்படி கண்களுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காத போது அங்கு தேவையற்ற நீர் அங்கேயே தங்கி நீர்ப்பையை
உருவாக்கிவிடும். அதோடு மது, சிகரெட், சரியான தூக்கமில்லாமை போன்றவைகளும் காரணமாகும்.

உடனேயே கவனிக்காவிட்டா அவை போகாமல் நிரந்தரமாக வயதான தோற்றத்தை தந்துவிடும். அதனைப் போக்கும் வழிகளை காண்போம்.

நேராக படுத்தல் :

முதுகினால் படுக்கும்போது திரவங்கள் கண்களுக்கு அடியில் தங்காமல் தடுக்கப்படும். குப்புற அல்லது பக்கவாட்டில் படுக்கும்ப்போது கண்களுக்கு அடியில் நீர் தங்கும் வாய்ப்புண்டு. ஆகவே நேராக படுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு :

நீங்கள் அதிகம் உப்பு உள்ள உணவுகளை சாப்பிட்டால் அவை நீர்த்தேக்கத்தை கண்களுக்கு உண்டுபண்ணிவிடும். உப்பு அதிகம் சாப்பிடுவர்களுக்கே கண்களுக்கு அடியில் சதைப்பை தொங்கும். ஆகவே உப்பு குறைவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகிற்கும் நல்லது.

பயிற்சி :

கண்களை இறுக்க சுருக்கி, அகல விரித்து, கண்களை மேலிருந்து கீழாக சுழற்றி, கீழிருந்து மேலாக சுழற்றி, இடம் வலம் மாறி மாறிப் பார்த்து,.. இப்படி தினமும் 1 நிமிடம் செய்து வந்தால் ரத்த ஓட்டம் பாய்ந்து அங்கிருக்கும் செல்களை ரிப்பேர் செய்து, கருவளையம், சுருக்கம், சதைப்பை போன்ற எல்லா பிரச்சனைகளையும் போக்கிவிடும்.

குளிர்ச்சியான பொருள் :

வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு போன்றவற்றை வட்டமாக நறுக்கி சில்லென்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தினமும் 10 நிமிடங்கள் கண்களின் மேல் வைத்தால் கண் சதைப்பை மறைந்துவிடும்.

கொலாஜன் உணவுகள் :

கொலாஜன் நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள். வயதாவதற்கு அடிப்படை காரணம் கொலாஜன் உற்பத்தி குறைவதால்தான். ஆகவே கொலாஜன் நிறைந்த உணவை சாப்பிடும்போது கண்களின் சதைப்பையும் மறைந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here