தலைமுடி சீக்கிரம் வெள்ளையாகுதா? முடி உதிர்தல் அதிகமாகுதா? இந்த ஒரு ஹெர்பல் டானிக்கை ட்ரை பண்ணுங்க!

0
3148

நரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் இரண்டுமே இன்றைய இளைஞர்களுக்கு வேகமாக வந்துவிடுகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், வாழ்க்கை முறை,பழக்க வழக்கங்கள் என எல்லாமே முற்றிலும் உடலுக்கு எதிரான திசைக்கு மாற்றி விட்டதால்தான் இந்த பாதிப்பு உண்டாகியுள்ளது.

நரை முடி வந்த உடனேயே கெமிக்கல் டையை நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், பின் வாழ்க்கை முடுதும் அதன் பின்னாலேயே போக நேரிடும். இங்கே சொல்லியுள்ள குறிப்பை வாரந்தவறாமல் பயன்படுத்திப் பாருங்கள்.

சில மாதங்களிலேயே நீங்கள் மகிழ்ச்சியாய் மாறும்படி நர்ரை முடி இயல்பான கருமை நிறத்திற்கு மாறிவிடும். முடி உதிர்தலும் நின்று போய் விடும். இது ஒரு அனுபவக் குறிப்பு.
இதனால் பக்கவிளைவுகள் உண்டாகாது. நரை முடி செழித்து உண்டாகும். இப்போது அந்த குறிப்பை எப்படி செய்வது என பார்க்கலம.

  1. ஹெர்பல் டானிக் தயாரிக்கும் முறை :

ஹெர்பல் டானிக் என்பது பழைய காலத்தில் தலைமுடிக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகள், அவற்றின் சாறு எடுத்து பதமாக காய்ச்சி எடுத்து தலைக்கு பயன்படுத்தினால் முடி நன்றாக செழித்து வளர்வதை காண்பீர்கள்.

2. தேவையானவை :

சுக்குப் பொடி – 2 ஸ்பூன்
ஆவாரம் பூ- ஒரு கைப்பிடி
ஆவாரம் இலைகள் – 1 கைப்பிடி
கரிசலாங்கண்ணி- 1 கப் அளவு.
மருதாணி இலைகள்- 1 கைப்பிடி
செம்பருத்தி இலைகள்- 1 கைப்பிடி.
கற்றாழை செல் – 5 ஸ்பூன்.
தேங்காய் எண்ணெய்-அரை லிட்டர்

3. தயாரிக்கும் முறை :

ஆவாரம் பூ மற்றும் இலைகள் கிடைத்தால் அவற்றை ஃப்ரெஷாக எடுத்தது பயன்படுத்தலாம். இல்லையென்றாலும் கவலையை விடுங்கள். நாட்டு மருந்து கடைகளில் மேலே சொன்னவற்றில் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

ஆவாரம் பூ இலைகள், கரிசலாங்கண்ணி, மருதாணி மற்றும் செம்பருத்தி இலைகளை சுத்தப்படுத்தி அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

4. ஹெர்பல் டானிக் ரெடி :

அதன் பின் அடுப்பில் தேங்கய எண்ணெயை மிதமான சூட்டில் காய வைத்து இந்த அரைத்த விழுதை சேர்க்கவும். சலசலப்பு அடங்கியவுடன் அடுப்பை அணைத்து அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூன்று நாட்கள் வெயிலில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அந்த எண்ணெயை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெய் மிகவும் வீரியமிக்கது. ஆகவே சிறிது பயன்படுத்தினாலே போதும். தினமும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை இந்த எண்ணெயினால் தலைமுடிக்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் காண்பீர்கள். நரை முடி குறைய ஆரம்பிக்கும்,முடி உதிர்தலும் நிற்கும்.

5. பலன் :

ஆவாரம் பூ உடலுக்கு குளிர்ச்ச் தருகிறது. இதனால் சூட்டினால் உண்டாகும் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது கரிசலாங்கண்ணி மற்றும் மருதாணி இலைகள் நரை முடியை கருமையாக மாற்றும் ஆற்றல் பெற்றவை. அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால்தான் அவற்றின் முழுப்பலனையும் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கற்றாழை நரை முடியை கருமையாக மாற்றும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நரைமுடிக்கு காரணமாக ஹைட்ரஜன் பெராக்ஸைடை, கற்றாழை கூந்தல் செல்களிலிருந்து நீக்குவதால் முடி கருமையடையும். செம்பருத்தி இலைகள் கூந்தலுக்கு பொஷாக்கையும், மினுமினுப்பையும் தரும் கண்டிஷனராக செய்ல்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த காரணிகளையும் நாம் பயன்படுத்துவதால் அதனல கிடைக்கப்பெறும் பலன்களிய நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவித்துப் பாருங்கள்.

6. 15 நாட்களில் முடி அடர்த்தியை தரும் அற்புத வெந்தயம் :

வேகமாக அடர்த்தியான கூந்தல் பெற வெந்தயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். ஊற வைத்த வெந்தயத்தினால் செய்யப்படும் இந்த குறிப்பை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதற்கான நேரம் வெறும் பதினைந்து நிமிடங்களே.

7. தேவையானவை :

வெந்தயம்- 2 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
நீர்- தேவையான அளவு.

8. தயாரிக்கும் முறை :

வெந்தயத்தையும், சீரகத்தையும் முந்தைய இரவே ஊற வைத்து விட வேண்டும். மறு நாள் ஊற வைத்த நீருடனே வெந்தயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து தலையில் மாஸ்க் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.

9. பலன் :

இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் நல்ல அடர்த்தியை பெறுவீர்கள். சைனஸ் பாதிப்பு உடையவர்கள் வாரம் இருமுறை செய்தால் போதுமானது. இவை வயதான பின் வரும் சொட்டையையும் தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here